[X] Close

ரஷ்ய ஏவுகணை ஒப்பந்தத்தில்கூட அரசு உத்தரவாதம் இல்லை: விமானப் படை மூத்த அதிகாரி பதில்


rafale-deal

கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 13 Feb, 2019 09:15 am
  • அ+ அ-

விமானப்படை அதிகாரிகள் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பிரான்ஸ் அரசு உத்தரவாதம் வழங்காதது ஏன் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு ஏர் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி பதில் அளித்தபோது, ‘‘ரஷ்யாவுடனான எஸ்-400 ஏவுகணை ஒப்பந்தத்தில்கூட அரசு தரப்பு உத்தரவாதம் இல்லை’’ என்று தெரிவித்தார்.

ஏர் மார்ஷல் அனில் கோல்சா கூறியபோது, ‘‘ரஷ்யா, அமெரிக்காவுடனான ராணுவ ஒப்பந்தங்களுக்கு தெளிவான விதிகள், வரையறைகள் உள்ளன. இதர நாடுகளுடனான ராணுவ ஒப்பந்தங்கள் குறித்த விதிகள் படிப்படியாக வரையறுக்கப்பட்டு வருகின்றன ’’ என்று தெரிவித்தார்.

பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த விமானப்படை அதிகாரி கூறியபோது, ‘‘ரஷ்யாவின் பாதுகாப்பு துறை உற்பத்தி நிறுவனங்கள் அனைத்துமே அரசு நிறுவனங்கள். அந்த நிறுவனங்களுடன் ராணுவ ஒப்பந்தம் மேற்கொள்ளும்போது தனியாக அரசு தரப்பு உத்தரவாதம் தேவையில்லை.

இதேபோல அமெரிக்காவுடனான ராணுவ ஒப்பந்தங்கள் அனைத்தும் அந்த நாட்டு ராணுவ தலைமையகமான பென்டகன் மூலமே மேற்கொள்ளப்படுகிறது. எனவே அதற்கும் அரசு தரப்பு உத்தரவாதம் தேவையில்லை. ரஃபேல் விவகாரத்தில் பிரான்ஸின் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close