[X] Close

ஊழல் முழுமையாக ஒழிக்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி


modi-speech

பிரதமர் நரேந்திர மோடி

  • kamadenu
  • Posted: 13 Feb, 2019 09:13 am
  • அ+ அ-

நாட்டில் ஊழல் முழுமையாக ஒழிக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஹரியாணா மாநிலம் குருஷேத்ராவில் நேற்று 'தூய்மை சக்தி 2019' என்ற மாநாடு நடைபெற்றது. இதில் தூய்மை இந்தியா திட்டத்தில் முக்கிய பங்கு வகித்த 2000-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:இந்தியாவின் மகள்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் சமுதாயம் மேம்படும். இதை கருத்திற் கொண்டே கடந்த 4 ஆண்டுகளில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்தது.

இந்திய விமானப் படையில் ஆண்கள் மட்டுமே போர் விமானிகளாக பணியாற்றி வந்தனர். தற்போது பெண்களும் போர் விமானிகளாகி உள்ளனர். பெண்களின் நலனுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. மகப்பேறு விடுப்பு 12வாரங்களில் இருந்து 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

செங்கோட்டையில் கழிப்பறை குறித்து நான் பேசியதற்காக சிலர் விமர்சனம் செய்தனர். அதை பற்றி நான் கவலைப்படவில்லை. தற்போது தூய்மை இந்தியா திட்டம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த 1947-க்குப் பிறகு ஒரு குடும்பம் நாட்டை ஆட்டிப் படைத்தது. நாட்டின் வேரை மறந்து வரலாற்றை திரித்து எழுதியது. அவர்களுக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள்.

நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டிருப்பவர்கள் மெகா கூட்டணி அமைக்க முயற்சி செய்கின்றனர். என்னையும் சிபிஐ அமைப்பையும் குறை கூறுகின்றனர். நேர்மையானவர்கள் என்னை நம்புகிறார்கள். ஆனால் ஊழல்வாதிகள் எதிர்க்கிறார்கள். நாட்டில் ஊழல் முழுமையாக ஒழிக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

பஞ்ச்குலாவில் தேசிய ஆயுர்வேதா நிறுவனம், கர்னாலில் பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா பல்கலைக்கழகம், பானிபட்டில் பானிபட் போர் அருங்காட்சியகம் ஆகிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close