[X] Close

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்


sabarimala-temple

  • நெல்லை ஜெனா
  • Posted: 12 Feb, 2019 18:50 pm
  • அ+ அ-

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாசி மாத பூஜைக்காக இன்று திறக்கப்பட்டது.  

சபரிமலையில் அனைத்துப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கேரளாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் நடந்தன. கடந்த மாதம் 2-ம் தேதி கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர். இதனால் மண்டல பூஜை மற்றும் மகர ஜோதி வழிபாட்டு காலம் முழுவதுமே பதற்றம் நிலவியது.

இந்தநிலையில் மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு வழிபாடு நடைபெற்றது. நாளை காலை பூஜைகள் தொடங்கும். அதன் பிறகு சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 17-ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.

சபரிமலை கோயிலுக்கு மீண்டும் செல்ல பிந்துவும், கனகதுர்காவும் உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு இந்து அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் போராட்டம் நடைபெறும் சூழல் உள்ளதால் சபரிமலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சன்னிதானம், பம்பை, நிலக்கலில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வாகனங்களுக்கும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. போராட்டம் நடத்துபவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என கேரள காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close