[X] Close

இந்தியா 2030-ல் உலகின் 2-வது பெரிய பொருளாதார வல்லரசாகும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி


india-is-the-world-s-2nd-largest-economy-by-2030

'அட்சய பாத்திரம்' தொண்டு நிறுவனம் சார்பில் 12 மாநிலங்களில் மாணவ, மாணவியருக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. இதில் 300-வது கோடி பயனாளிக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி உத்தர பிரதேசம், மதுராவில் உள்ள விருந்தாவனத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று மாணவ, மாணவியருக்கு உணவு ஊட்டினார். படம்: பிடிஐ

  • kamadenu
  • Posted: 12 Feb, 2019 10:53 am
  • அ+ அ-

வரும் 2030-ம் ஆண்டில் உலகின் 2-வது பெரிய பொருளாதார வல்லரசாக இந்தியா உருவெடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சார்பில் டெல்லி அருகேயுள்ள கிரேட்டர் நொய்டாவில் நேற்று சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதில் 95 நாடுகளைச் சேர்ந்த எண்ணெய் வளத் துறை அமைச்சர்கள், 70 நாடுகளைச் சேர்ந்த 7,000 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:பொருளாதாரத்தில் உலகில் அதிவேகமாக வளரும் நாடு என்றபெருமையை இந்தியா பெற்றுள்ளது. வரும் 2030-ம் ஆண்டில் உலகின் 2-வது பெரிய பொருளாதார வல்லரசாக இந்தியா உருவெடுக்கும். இந்த ஆண்டில் நாடு முழுவதும் 100 சதவீத வீடுகளுக்கு மின் இணைப்பு என்ற சாதனையை எட்டியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

அட்சய பாத்திரம் திட்டம்

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அட்சய பாத்திரம் என்ற தொண்டு நிறுவனம் நாடு முழுவதும் உள்ளபள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு மதிய உணவு வழங்கி வருகிறது. கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் 300-வது கோடி பயனாளிக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி உத்தர பிரதேசத்தின் மதுரா நகரில் உள்ள விருந்தாவனத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று 300-வது கோடி பயனாளிக்கு உணவு பரிமாறினார். அங்கு அவர் பேசியபோது, இந்திர தனுஷ் தடுப்பூசி திட்டத்தை உலகமே பாராட்டுகிறது. இந்த திட்டத்தில் குழந்தைகளுக்கு 12 விதமான தடுப்பூசிகள் போடப்படுகிறது. இந்திய கலாச்சாரத்தில் பசுக்கள் புனிதமானது. பசுக்களின் நலனுக்காக 'ராஷ்டிரிய காமதேனு ஆயோக்' என்ற தேசிய ஆணையம் தொடங்கப்பட்டுள்ளது" என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close