[X] Close

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து டெல்லியில் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்: ராகுல் காந்தி, அரவிந்த் கேஜ்ரிவால், பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் ஆதரவு


chandrababu-naidu-fasting-in-delhi

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.படம்: பிடிஐ

  • kamadenu
  • Posted: 12 Feb, 2019 10:48 am
  • அ+ அ-

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கா ததைக் கண்டித்து ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு டெல்லியில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட் டோர் அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங் காததைக் கண்டித்து தெலுங்கு தேசம் சார்பில் டெல்லியில் நேற்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமை வகித்தார். 22 கட்சிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போராட்ட வளாகத்துக்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:

ஆந்திராவுக்கு அளித்த வாக்குறுதிகளை பிரதமர் நரேந்திர மோடி நிறை வேற்றவில்லை. ஆந்திர மக்களோடு இணைந்து நானும் போராடுவேன். பிரதமர் நரேந்திர மோடி செல்லும் இடமெல்லாம் பொய் கூறுகிறார்.

ஊழலுக்கு எதிராக போராடுகிறேன் என்று கூறுகிறார். ஆனால் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் விமானப்படை யிடமிருந்து ரூ.30,000 கோடியை திருடி அனில் அம்பானிக்கு வழங்கியுள்ளார். இதில் ஆந்திர மக்களின் வரிப்பணமும் உள்ளது. ஆந்திர மக்களின் பணத்தையும் திருடி அனில் அம்பானிக்கு, மோடி கொடுத்துள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசிய போது, "ஆந்திரா இந்தியாவின் ஒரு பகுதி. எங்கள் உரிமையை கேட்கிறோம். அனைத்து மாநில மக்களும் எங்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி ராஜ தர்மத்தை கடைப்பிடிக்க வில்லை. நாங்கள் நாட்டை ஒன்றிணைக்க பாடுபடுகிறோம். பாஜக நாட்டை பிளவு படுத்த முயற்சிக்கிறது" என்று தெரிவித் தார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா உட்பட ஏராளமான எதிர்க் கட்சித் தலைவர்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் சமூக வலைதளங்கள் மூலம் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

சர்வாதிகாரத்தை அகற்றுவோம் என்ற தலைப்பில் நாளையும் நாளை மறுநாளும் எதிர்க்கட்சிகள் தரப்பில் டெல்லியில் தர்ணா நடத்தப்படுகிறது. இதில் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close