[X] Close

டெல்லி ஆந்திரா பவனுக்கு வெளியே மாற்றுத்திறனாளி தற்கொலை: உரிமை கோரும் முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி போலீஸார்


at-chandrababu-naidu-s-hunger-strike-spot-in-delhi-handicap-man-commits-suicide

  • போத்திராஜ்
  • Posted: 12 Feb, 2019 10:42 am
  • அ+ அ-

 

புதுடெல்லி, பிடிஐ

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி முதல்வர் சந்திரபாப நாயுடு டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் நேற்று உண்ணாவிரதம் இருந்தநிலையில், ஆந்திரா பவனுக்கு வெளியே மாற்றுத்திறனாளி ஒருவர் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்துள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட மாற்றுத்திறனாளி குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம், சிறீகாகுளம் மாவட்டம், கிந்தாலி கிராமத்தைச் சேர்ந்த தவாலா அர்ஜுன் ராவ் (வயது40) தற்கொலை செய்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

தற்கொலை செய்து கொண்ட அர்ஜுன் ராவ், ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து கோரி உயிர்த்தியாகம் செய்துள்ளார் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகிறார்.

ஆனால், டெல்லி போலீஸாரோ, அர்ஜுன் ராவ், நிதிப்பிரச்சினை,கடன் பிரச்சினை காரணமாகத் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், " ஆந்திராவில் உள்ள மக்கள் இதுபோன்ற தவறான முடிவுகளை எடுக்கக் கூடாது. சிறப்பு அந்தஸ்துவழங்க வேண்டும் என்பதான நமது கோரிக்கை தேசிய பிரச்சினை. நமக்கு அனைவரின் ஆதரவும் கிடைத்துள்ளது. நாம் தனியாக இல்லை, நமக்கு நம்பிக்கை கிடைத்துள்ளது.

யாரும் தவறான முடிவு எடுத்து, தற்கொலை செய்து கொள்ளக்கூடாது. சமூகத்துக்கு இது நல்லதல்ல. உங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தவிக்கவிடாதீர்கள். நாம் போராடுவோம், இலக்கை அடைவோம் " எனத் தெரிவித்தார்.

ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து கோரி மாற்றுத்திறனாளி தற்கொலை செய்யவில்லை என்று டெல்லி போலீஸார் கூறுகின்றனர். டெல்லி துணை போலீஸ் கமிஷனர் மதுர் வர்மா கூறுகையில், " உண்ணாவிரதம் தொடங்கும் முன்பாக அந்த இளைஞர் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றோம் ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவீட்டார். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில் தனக்கு பணப்பிரச்சினை, கடன் பிரச்சினை இருப்பதால், தற்கொலை முடிவு எடுத்தேன் எனத் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து கோரி தற்கொலை செய்யவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. உடற்கூறு ஆய்வு முடிந்தபின் உடல் உடறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் " எனத் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close