[X] Close

வீடுகள் விற்பனையில் தென் இந்தியா முன்னிலை


real-estate

  • kamadenu
  • Posted: 12 Feb, 2019 10:40 am
  • அ+ அ-

ரியல் எஸ்டேட் துறையில் வீடுகள் விற்பனையில் இந்தியாவின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் தென் இந்தியாவில் நல்ல முன்னேற்றம் உள்ளது என ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான அனராக் தெரிவித்துள்ளது.

ரியல் எஸ்டேட் துறைக்கு 2018-ம்வருடம் பல்வேறு ஏற்ற இறக்கங்களுடனேயே முடிந்திருக்கிறது. ரியல் எஸ்டேட் துறை கொள்கைகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களால் ஏற்பட்ட தாக்கம் நாளடைவில் குறைந்துள்ளது. தற்போது நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ரியல் எஸ்டேட் துறை மீண்டு வரும் அறிகுறிகளைப் பார்க்க முடிகிறது என அனராக் நிறுவனத்தின் துணைத் தலைவர் சந்தோஷ் குமார் கூறியுள்ளார். குடியிருப்பு வீடுகள் மட்டுமல்லாமல், சிறு வணிகம் மற்றும் தொழில் அலுவலகப் பிரிவும் தென்இந்திய நகரங்களில் முன்னேற்றம் அடைந்துள்ளது என்றார்.

அனராக் என்ற ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனம் வெளியிட்டுள்ள விவரங்களின்படி, தென் இந்திய நகரங்களில், அலுவலகம் தொடர்பான ரியல்எஸ்டேட் விற்பனை 21 மில்லியன்சதுர அடியாக உள்ளது. ஆனால் டெல்லியில் இப்பிரிவில் மொத்தமாகவே 6 மில்லியன்சதுர அடி மட்டுமே விற்பனை ஆகியுள்ளது என்று தெரியவந்துள்ளது. “ரியல் எஸ்டேட் துறையைப் பொருத்தவரை 2018-ம் ஆண்டில் தென் இந்திய நகரங்களில் உற்சாகமான போக்கு நிலவி வந்ததை மிகத் தெளிவாக உணர முடிகிறது. ரியல் எஸ்டேட் தொடர்பான நிபுணத்துவம் மிக்க, முறைப்படுத்தப்பட்ட அணுகுமுறையின் மூலம் அவர்கள் பலன்அடைந்துள்ளார்கள். இதனை ரெரா சட்டத்துக்கு முன் மட்டுமல்ல, ரெராசட்டம் நடைமுறைப் படுத்தப்பட்ட தற்கு பின்னும் காண முடிகிறது” என்று சந்தோஷ் குமார் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close