[X] Close

நிரந்தர வேலை வாய்ப்புதான் பிரச்சினை: தலைமை பொருளாதார ஆலோசகர் கருத்து


permanent-job

கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்

  • kamadenu
  • Posted: 12 Feb, 2019 10:33 am
  • அ+ அ-

நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் பிரச்சினை அல்ல. ஆனால் நிரந்தர வேலை வாய்ப்பை உருவாக்குவதுதான் பிரச்சினை என்று புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் கருத்து தெரிவித்துள்ளார்.

புள்ளி விவரங்கள் மிகவும் முக்கியமானவை, அந்த விஷயத்தில் ஒவ்வொரு எண்ணும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்றார். ஒரு விஷயத்தை செயல்படுத்தும் முன்பு அதை ஒரு முறை அல்ல 10 முறை நான் அலசி ஆராய்ந்த பிறகே முடிவெடுப்பேன். கல்வியாளர்களின் பொதுவான அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றார்.

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பு நீக்கம் மற்றும்சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி)விதிப்பு ஆகிய இரண்டுமே மிகவும் முக்கியமான விஷயங்கள். எந்த ஒரு விஷயத்தையும் செயல்படுத்துவதற்கு முன்பு அதன் விளைவுகள்எவ்விதம் இருக்கும் என்பதைப் பல்வேறு வகைகளில் ஆராய வேண்டும். யாருமே எதிர்பாராத வகையில்ஒரு நிகழ்வை செயல்படுத்தும் போது அதன் விளைவுகள் நாம்கணித்ததற்கும் அதிகமாக எதிர்பார்க்காத நிகழ்வுகளும் அரங்கேறும் என்றார்.

வேலை வாய்ப்பு குறித்து தகவல் தெரிவிக்கும் முன்பு அதை முற்றிலுமாக ஆராய வேண்டும். அதன்படி பொருளாதார ஆய்வறிக்கையில் வேலை வாய்ப்பு குறித்த விவரம் எந்த வகையில் அணுகப்பட்டுள்ளது என்பதை ஆராய வேண்டும். இபிஎப்ஓ அலுவலகம் வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு குறித்த தகவலை ஆராய்ந்தோமானால், அதில் 10 பேருக்குக் குறைவாக வேலைவாய்ப்பு அளித்த நிறுவனங்கள் பற்றிய விவரம் இருக்காது. அந்த வகையில் அது வெளியிடும் தகவல் குறைத்தே மதிப்பிடப்படுகிறது. 15 மாதங்களில் 73 லட்சம் வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை நிச்சயம் அலசி ஆராய வேண்டியுள்ளது என்றார்.

பொருளாதார வளர்ச்சி இருக்கும்போது நிச்சயம் வேலைவாய்ப்பு உருவாக்கம் இருக்கும். வேலை, மூலதனம் ஆகியவை இருக்கும்போதுதான் எந்த ஒரு நிறுவனத்திலும் வளர்ச்சி இருக்கும். உற்பத்தி அதிகரிக்கும்போது பொருளாதாரம் வளர்ச்சியடையும். அந்த வகையில் வளர்ச்சி இருக்கும்போது வேலை வாய்ப்பு உருவாக்கமும் இருந்தாக வேண்டியது அவசியம்.

கடன் தள்ளுபடி தீர்வாகாதுபொருளாதாரம் அறிந்தவன் என்ற முறையில் கடன் தள்ளுபடி ஒரு போதும் தீர்வாக இருக்காது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன். இதுமோசமான திட்டமும் கூட.

கடன் தள்ளுபடி பயனை அடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்படாதவர்கள் என்பதுதான் கடந்த காலங்களில் கண்டறியப்பட்ட உண்மை. 2008-ம் ஆண்டிலிருந்து பார்க்கும்போது வேளாண்உற்பத்தி அதிகரித்துக் கொண்டேதான் வந்துள்ளது. ஆனால் கடன் தள்ளுபடி பலனை பாதிப்புக்குள்ளாகாதவர்களும் பெற்றுள்ளனர். இவ்விதம் பாதிப்படையாதவர் இந்த பலனை பெறும்போது அது பெரும் விபரீதத்தை உண்டாக்கும். இது வங்கிகளை பலவீனப்படுத்தும். உண்மையில் இதுவிவசாயிகளுக்கு பாதகமான நடவடிக்கை. அதேசமயம் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) அளிக்கப்படும்பட்சத்தில் அதன்காரணமாக உற்பத்தி அதிகரித்துள்ளது கண்கூடு. இது அடிப்படையில் பலன் அளிக்கக் கூடியது. குறைந்தபட்ச ஆதரவு விலை அளிப்பதன் மூலம் விவசாயத்தில் உள்ள இடர்களை ஓரளவு குறைக்க முடியும். ஆனால் சில சமயங்களில் இந்த குறைந்தபட்ச ஆதரவு விலை பயிர் சாகுபடி முறையையே பாதிக்கும்.

ஒருவேளை பண பரிமாற்றத்தை விவசாயிகளுக்கு அளிக்கும்போது, எதை பயிரிடுவது, எதை தவிர்ப்பது என்பதை விவசாயிகளே தேர்வு செய்து கொள்ளலாம். இதன் மூலம் பயிர் சாகுபடியை அரசுநிர்ணயிக்க வேண்டிய அவசியம்இருக்காது என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close