[X] Close

5 நாள் மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு


sabarimala-temple

  • kamadenu
  • Posted: 12 Feb, 2019 10:07 am
  • அ+ அ-

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதம்தோறும் நடைபெறும் பூஜைகளுக்காக இன்று நடை திறக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதந்தோறும் பூஜைகளுக்காக நடை திறக்கப்படுகிறது. மலையாள மாதம் கும்பத்தை முன்னிட்டு, இன்று செவ்வாய்க்கிழமை கோயில் நடை திறக்கப்படுகிறது. ஐந்து நாட்கள் கோயில் திறந்திருக்கும். கோயிலில் தந்திரிகண்டராரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி மாலை 5 மணிக்கு கோயில் நடையை திறக்கிறார். எனினும், கோயிலில் சடங்குகள் எதுவும் நடைபெறாது.

இந்த 5 நாட்களில் கலபாபிஷேகம், சகஸ்ரகலசம் மற்றும் லட்சார்ச்சனை போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்பின் வரும் 17-ம் தேதி கோயில் நடை மூடப்படும். கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பக்தர்கள் நிலக்கல்லில் இருந்து கோயிலுக்குச் சென்று வர கேரள மாநில போக்குவரத்துத் துறை சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close