[X] Close

ரூ. 27 ஆயிரம் கோடி கையிருப்பை அரசுக்குத் தர வேண்டும்: ரிசர்வ் வங்கியிடம் நிதி அமைச்சகம் கோரிக்கை


reserve-bank

மத்திய ரிசர்வ் வங்கி - Reuters

  • kamadenu
  • Posted: 11 Feb, 2019 11:21 am
  • அ+ அ-

ரிசர்வ் வங்கியிடம் உள்ள ரிசர்வ் கையிருப்பு ரூ.27,380 கோடியை மத்திய அரசுக்குக் கொடுக்குமாறு நிதி அமைச்சகம் கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரிசர்வ் வங்கி ஒவ்வொரு நிதி ஆண்டும் உபரி வருமானத்தில் ஒரு பகுதியை நாட்டின் ரிசர்வ் மற்றும் ரிஸ்க் காரணங்களுக்காக சேமித்து வைப்பது வழக்கம். இப்படியாக 2016-17-ம் நிதி ஆண்டில் ரூ.13,190 கோடியும், 2017-18 நிதி ஆண்டில் ரூ.14,190 கோடியும் சேமிப்பாக வைத்துள்ளது. இவைமொத்தமாக ரூ.27,380 கோடியாகும். இந்த ரிசர்வ் கையிருப்பை மத்திய அரசுக்குத் தருமாறு நிதி அமைச்சகம் கேட்டுள்ளது. ஏற்கெனவே, ரிசர்வ் கையிருப்பை அரசு கேட்கிறது என்ற விவகாரத்தினால்தான் ரிசர்வ்வங்கிக்கும், அரசுக்கும் இடையே மோதல்கள் எழுந்தன. இந்த மோதலில் உர்ஜித் படேல் தனது கவர்னர் பதவியையே ராஜினாமா செய்தார். இந்நிலையில் தற்போது நிதி அமைச்சகம் ரிசர்வ் வங்கியிடம் கடந்த இரண்டு நிதி ஆண்டுகளில் உபரி வருமானத்தில் ரிசர்வ் கையிருப்பாக சேமித்து வைத்திருப்பதைக் கேட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் பொருளாதார விவகாரங்கள் துறைசெயலாளர் சுபாஷ் சந்திர கார்க்,ரிசர்வ் வங்கி தனது உபரி கையிருப்பு ரூ.28 ஆயிரம் கோடியை இடைக்கால டிவிடெண்டாக அரசுக்கு வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார். ரிசர்வ் வங்கி இந்த நிதி ஆண்டில்ஏற்கெனவே ரூ.40 ஆயிரம் கோடியை அரசுக்கு வழங்கியிருக்கிறது. தற்போது இந்த ரூ. 27,000கோடியை அரசுக்கு வழங்க ரிசர்வ்வங்கி இயக்குனர் குழு ஒப்புக்கொண்டால் இந்த நிதி ஆண்டில் ரூ. 68 ஆயிரம் கோடி அரசுக்கு கிடைத்ததாக இருக்கும். மேலும் வரும் 2019-20 நிதி ஆண்டில் ரூ. 69 ஆயிரம் கோடி டிவிடெண்ட் வழங்க வேண்டுமென அரசு எதிர்பார்ப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close