[X] Close

பிரியோ கார் உற்பத்தியை நிறுத்துகிறது ஹோண்டா


honda-company

  • kamadenu
  • Posted: 11 Feb, 2019 11:18 am
  • அ+ அ-

ஜப்பானைச் சேர்ந்த கார் நிறுவனமான ஹோண்டா தனது ஹேட்ச்பேக் மாடல் பிரியோ கார் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது.

ஹோண்டா நிறுவனத்தின் முதல் நிலை காராக இருந்துவந்த ஹேட்ச்பேக் மாடல் பிரியோ கார் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக நிறுவனத்தின் விற்பனை பிரிவு மூத்த துணைத் தலைவர் ராஜேஷ் கோயல் தெரிவித்துள்ளார். இனி ஹோண்டா நிறுவனத்தின்முதல் நிலை காராக ஹோண்டாவின் காம்பேக்ட் செடான் மாடல் காரான அமேஸ் இருக்கும் எனக் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,“17 வருடங்களாக சந்தையில் இருந்துவந்த ஹோண்டா பிரியோ கார் உற்பத்தியை நிறுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் விருப்பம் ஒப்பீட்டளவில் பெரிய கார்களைத் தேர்வு செய்வதாக உள்ளது. எனவேஇந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு 6-7 வருடங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டிருக்க வேண்டும்” என்றார்.

மேலும், பிரியோவின் அடுத்த தலைமுறை மாடலை உருவாக்கும் திட்டமும் இதுவரையிலும் இல்லை. காம்பேக்ட் செடான் காரான ஹோண்டா அமேஸ் விற்பனையை அதிகரிக்கும் தீவிர முனைப்பில் ஈடுபட்டுள்ளோம் என்றும் கூறினார்.

2001-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோண்டா பிரியோ, இதுவரை இந்தியாவில் 97 ஆயிரம்யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன. பிரியோ கார் பிரியர்களுக்கு ஹோண்டாவின் இந்த முடிவு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close