[X] Close

உறைபனியால் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை மூடல்: 300 மாணவர்கள் தேர்வு எழுத உதவிய விமானப்படை


srinagar-jammu-highway-closure-by-frost

  • kamadenu
  • Posted: 11 Feb, 2019 11:03 am
  • அ+ அ-

ஜம்மு-காஷ்மீரில் உறைபனி நிலவுவதால் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் கேட் தேர்வு எழுத முடியாமல் தவித்த 300 மாணவர்கள் தேர்வு எழுத விமானப்படை உதவியது.

ஜம்மு-காஷ்மீரில் கேட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 2, 3, 9, 10 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதற்காக ஸ்ரீநகர், ஜம்மு, பாரமுல்லா உட்பட 6 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.

ஜம்மு-காஷ்மீரில் தற்போது கடும் உறைபனி நிலவுகிறது. ஜம்மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலை உட்பட பல்வேறு முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக கடந்த 2, 3-ம் தேதிகளில் நடந்த கேட் தேர்வை 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரால் எழுத முடியவில்லை.

இதைத் தொடர்ந்து ஆளுநர் சத்ய பால் மாலிக் உத்தரவின் பேரில் மாணவர்களுக்கு உதவ விமானப்படை முன்வந்தது. கடந்த 9, 10-ம் தேதி நடந்த தேர்வுகளுக்காக ஸ்ரீநகர், ஜம்மு இடையே விமானப்படையின் சி17 குளோப் மாஸ்டர் என்ற விமானம் இயக்கப்பட்டது.

இதன்மூலம் கேட்தேர்வுக்கு விண்ணப்பித்த 319 மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். கடும் பனியில் சிக்கித் தவித்த 180 சுற்றுலா பயணிகளும் விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர். சரியான நேரத்தில் உதவி செய்த விமானப் படைக்கு மாணவர்களும் சுற்றுலா பயணிகளும் நன்றி தெரிவித்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close