[X] Close

மோடி கோ பேக்: ஆந்திரா சென்ற பிரதமர் மோடிக்கு கடும் எதிர்ப்பு: சந்திரபாபு நாயுடு புறக்கணிப்பு


tdp-protest-modi-s-visit-to-andhra-pradesh

மோடிக்கு எதிராக வைக்கப்பட்டுள்ள பேனர்

  • போத்திராஜ்
  • Posted: 10 Feb, 2019 12:18 pm
  • அ+ அ-

 

அமராவதி, ஐஏஎன்எஸ்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆந்திராவில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் மோடி அங்கு இன்று சென்றுள்ளார்.

விஜயவாடாவில் உள்ள ஞானாவரம் விமான நிலையத்துக்குத் தனி விமானத்தில் வந்து சேர்ந்த பிரதமர் மோடியை ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன், பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பலர் வரவேற்றனர். ஆனால், முதல்வர் சந்திரபாபு நாயுடு வரவேற்றக் செல்லவில்லை.

ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு மறுத்துவிட்டதாகக் கூறி தெலுங்குதேசம் கட்சி கூட்டணியில்இருந்து வெளியேறியது. சிறப்பு அந்தஸ்து கோரி கடந்த ஓர் ஆண்டாக தெலுங்குதேசம் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது.

இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் எஸ்பிஆர், ஐஎஸ்பிஆர்எல் ஆகிய பெட்ரோலியம் சுத்திகரிப்பு மையங்களை நாட்டுக்குப் பிரதமர் மோடி அர்ப்பணிக்கிறார். அதன்பின் குண்டூரில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

ஆனால் பிரதமர் மோடி, ஆந்திராவுக்குத் துரோகம் செய்துவிட்டார் எனக் கூறி, அவரின் வருகைக்கு ஆளும் தெலுங்குதேசம் கட்சி, காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பவன் கல்யானின் ஜன சேனா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கடும் தெரிவித்துள்ளன. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மோடிக்கு எதிராகப் பதாகைகளும், பேனர்களும் அமைக்கப்பட்டுள்ளன.

நோமோர்மோடி, மோடிஇஸ்மிஸ்டேக், மோடிநெவல்ஏகெயின், மோடி கோ பேக் ஆகிய ஹேஸ்டேக்குகள் சமூக ஊடகங்களில் பிரபலமாகியுள்ளன.

தெலுங்குதேசம் உள்ளிட்ட பல கட்சியினர் கறுப்பு கொடிகளையும், கறுப்பு உடைகளையும் அணிந்து மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் அமைதியான முறையில் மோடியின் வருகைக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

முதல்வர் சந்திரபாபு நாயுடு, தொண்டர்களிடம் கூறுகையில், " ஆந்திர மாநிலத்துக்குப் பிரதமர் மோடி வரும் இன்றைய நாள் கறுப்பு நாள். ஆந்திர மாநிலத்துக்கு அநீதி இழைத்துவிட்டு மோடி இங்கு வருகிறார். மாநிலங்களையும், ஜனநாயக அமைப்புகளையும் பிரதமர் மோடி பலவீனப்படுத்திவிட்டார். ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் மோடியின் தலையீடு நாட்டுக்கு தலைகுணிவை ஏற்படுத்தி இருக்கிறது. நம்முடைய எதிர்ப்பை அஹிம்சை வழியில் வெளிப்படுத்த வேண்டும் " எனத் தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close