[X] Close

நாடாளுமன்ற குழு முன்னிலையில் ட்விட்டர் அதிகாரிகள் ஆஜராக மறுப்பு


twitter-id

  • kamadenu
  • Posted: 10 Feb, 2019 10:44 am
  • அ+ அ-

சமூக வலைதளங்களில் மக்களின்உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான விவகாரத்தில் ட்விட்டர் நிறுவன அதிகாரிகளுக்கு, நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப குழு சம்மன் அனுப்பிஇருந்தது. ஆனால், நாடாளுமன்ற குழு முன்னாள் ஆஜராக ட்விட்டர் நிறுவன அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக வலைதளங்களில் தனிநபர் தகவல்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ள நிலையில், இது தொடர்பான விவகாரம் ஒன்றில், நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்பக் குழு ட்விட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட சில மூத்த அதிகாரிகளுக்கு பிப்ரவரி 1-ம் தேதி சம்மன் அனுப்பியுள்ளது.

அந்த சம்மன் கடிதத்தில் பிப்ரவரி 7-ம் தேதி அதில் குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் நாடாளுமன்ற குழு முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால், அனைவரும் ஆஜராக வேண்டும் என்பதால் விசாரணை தேதி பிப்ரவரி 11-க்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் சர்வதேச அளவிலான சட்ட வழக்கறிஞர் விஜய் காடி அனுப்பியுள்ள கடிதத்தில், ட்விட்டர் நிறுவன அதிகாரிகள் நாடாளுமன்ற குழு முன்னிலையில் ஆஜராக மறுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதற்கு, மிகக் குறுகிய காலத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதால் வருவது கடினம். பயண காலமே பத்து நாட்கள் ஆகும் எனக் கூறியுள்ளனர். மேலும் வழக்கறிஞர் கடிதத்தில், நிறுவனத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு அமலாக்க முடிவுகளை எடுக்கக்கூடிய அளவில் ட்விட்டர் யாரும் இந்தியாவில் இல்லை எனவும் கூறியுள்ளார்.

ட்விட்டர் மீது நாடுகள் எடுக்கப்படும் விசாரணை நடவடிக்கை தொடர்கதையாக உள்ளது. அமெரிக்க காங்கிரஸ், சிங்கப்பூர், ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றைத் தொடர்ந்து நான்காவதாக இந்தியா ட்விட்டர் மீது விசாரணை நடவடிக்கையை எடுத்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close