[X] Close

ரஃபேல் விமானங்களின் விலையை மோடியே நேரடியாக முடிவு செய்தார்: சிவசேனா விளாசல்


  • க.சே.ரமணி பிரபா தேவி
  • Posted: 09 Feb, 2019 17:13 pm
  • அ+ அ-

 

 

ரஃபேல் ஒப்பந்தம் மூலம் விமானங்களின் விலையை மோடியே நேரடியாக முடிவுசெய்துள்ளார் என்று சிவசேனா கூறியுள்ளது.

 

சர்ச்சைக்குரிய ரூ.7.87 பில்லியன் ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தைகளின் உச்சகட்டத்தில் பிரான்ஸுடன் பாதுகாப்பு அமைச்சகம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே பிரதமர் அலுவலகமும்  “இணைப்பேச்சுவார்த்தைகள்” நடத்தியதற்கு பாதுகாப்பு அமைச்சகம் கடும் எதிர்ப்பை எழுப்பியிருப்பது தெரியவந்துள்ளது. 'தி இந்து' ஆங்கில நாளிதழில் இதுதொடர்பான ஆவணங்கள் வெளியாகின.

 

இந்நிலையில் இதுதொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வமான நாளேடான 'சாம்னா'வில் கூறப்பட்டிருப்பதாவது:

 

''வியாழக்கிழமை அன்று பிரதமர் மோடி, தேசப்பற்று குறித்து நாடாளுமன்றத்தில் பேசி, ரஃபேல் விவகாரத்தை மறுத்திருந்தார். ஆனால் அதற்கு அடுத்த நாளே கருப்புப் பக்கம் ('தி இந்து' ஆவணம்) வெளிப்பட்டுவிட்டது.

 

இந்த ஒப்பந்தம் மூலம் பிரதமர் மோடி வலிமையாக்க முயன்றது இந்திய விமானப் படையையா அல்லது நிதிப்பிரச்சினையில் சிக்கிய தொழிலதிபரையா என்று பதிலளிக்க வேண்டு.ம்

 

இந்த விவகாரம் மூலம் எதிர்க்கட்சி (காங்கிரஸ்) பலன் பெறலாம். ஆனால் உண்மை எப்போதும் உயிருடனே இருக்கும்.

 

பிரதமர் அடிக்கடி நாடாளுமன்றத்தில் பாதுகாப்புப் படையை பலப்படுத்துவதில் காங்கிரஸுக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்துக்கொண்டே இருந்தார். ஆனால் அடுத்த நாளே (நேற்று) வெளியான ஆவணங்கள், ரஃபேல் ஒப்பந்தத்தில் மோடியின் தனிப்பட்ட விருப்பம் எந்த அளவுக்கு இருந்தது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

 

ரஃபேல் விவகாரத்தை  மோடி நேரடியாகக் கையாண்டுள்ளார். அதில் முக்கியப் புள்ளிகளாக இருந்திருக்க வேண்டிய பாதுகாப்புத் துறை அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சகமும் அதிலிருந்து தள்ளி நிற்க வைக்கப்பட்டனர்.

 

ரஃபேல் விமானங்கலின் விலை குறித்த விவகாரங்களில் மோடியே முடிவுகளை எடுத்திருக்கிறார். இதனால் அவர் விமர்சனங்களைக் கண்டிப்பாக எதிர்கொள்ள வேண்டும்.

 

தேசியப் பாதுகாப்பு விவகாரத்தில் விளக்கம் கோருவது எப்படி தேசத்தை விமர்சிப்பதாகும்?'' என்று சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close