[X] Close

ஆந்திரா வரும் மோடிக்கு எதிராக நாளை மாபெரும் போராட்டம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு


  • க.சே.ரமணி பிரபா தேவி
  • Posted: 09 Feb, 2019 17:02 pm
  • அ+ அ-

 

 

ஆந்திரப் பிரதேசத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக 10-ம் தேதி தெலுங்கு தேசம் சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவரும் மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

 

தெலுங்கு தேசக் கட்சித் தலைவர்களுடன் டெலிகான்ஃபரன்ஸில் உரையாடிய அவர், ''ஆந்திரா வரும் பிரதமர் மோடிக்கு எதிராக 10-ம் தேதி நம் கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட உள்ளது. தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தை வெற்றிப் போராட்டமாக மாற்ற வேண்டும்.

 

அதேபோல பிப்ரவரி 11-ம் தேதி திங்கட்கிழமை ஆந்திரப் பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி டெல்லியில் 12 மணி நேரத் தர்ணா நடத்தத் திட்டமிட்டுள்ளோம்' என்று தெரிவித்துள்ளார்.

 

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தரவில்லை என்று கூறி பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. அதைத்தொடர்ந்து, விரைவில் நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.

 

பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைப்பது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம்சிங் யாதவ், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரை சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close