[X] Close

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து தாயகம் திரும்பினார் அருண் ஜேட்லி 


jaitley-back-home

  • பாரதி ஆனந்த்
  • Posted: 09 Feb, 2019 16:48 pm
  • அ+ அ-

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார். தாயகம் திரும்பியதில் மகிழ்ச்சி என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜேட்லிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை செய்துகொண்டாலும்கூட அவருக்கு அவ்வப்போது சிறு சிறு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அவர் அமெரிக்கா சென்றதால் இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் செயல்பட்டார். இடைக்கால பட்ஜெட்டை அவரே தாக்கல் செய்தார்.

ஜேட்லி அமெரிக்காவில் இருந்தாலும்கூட சமூகவலைதளங்களில் எப்போதும் போல் சுறுசுறுப்பாகவே இயங்கிக் கொண்டிருந்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது அதனை வரவேற்று ட்வீட் செய்திருந்தார். இன்றும் தாயகம் திரும்பியவுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து ட்வீட் செய்திருக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close