[X] Close

குடியுரிமை மசோதாவை எதிர்த்து அசாமில் 2வது நாளாக மோடிக்கு கருப்புக்கொடி; மாணவர்கள் கைது


citizenship-bill-protesters-again-wave-black-flags-at-modi-in-assam

பிரதமர் நரேந்திர மோடி

  • பால்நிலவன்
  • Posted: 09 Feb, 2019 12:15 pm
  • அ+ அ-

அசாம் மாநிலத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடிக்கு தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக கருப்புக்கொடி காட்டி மாணவர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிரதமர் மோடி, அசாம் மாநிலத்திற்கு நலத் திட்டங்களை தொடங்கி வைக்க நேற்று மாலை வந்தடைந்தார். அப்போது குடியுரிமைச்சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மாணவர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போலீஸார் தெரிவித்த விவரம்:

பிரதமர் மோடி, நேற்று (வெள்ளிக்கிழமை மாலை) கவுகாத்தி விமான நிலையத்திலிருந்து ராஜ்பவனுக்கு செல்லும் வழியிலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அசாம் யுவா சாத்ரா பரிஷத் அமைப்பினர் மாக்காவா பகுதியில் கருப்புக்கொடி காட்டினர்.

சிலநிமிடைங்களிலேயே இன்னொரு மாணவர் பிரிவினர், ஜாலக்பாரி பகுதியில் அமைந்துள்ள கவுகாத்தி பல்கைலைக்கழகத்தை பலத்த பாதுகாப்புடன் கடந்து சென்ற பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டினர்.

பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டிய இரு பிரிவு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கவுகாத்தியில் தரையிறங்கியதும், விமான நிலையத்திலிருந்து ராஜ்பவனில் இரவு தங்குவதற்காக சென்ற பிரதமரை அவர் செல்லும் பாதையில் நான்கு வெவ்வேறு இடங்களில் கருப்பு கொடிகளை காட்டினர்.

நூற்றுக்கணக்கான கவுகாத்தி பல்கலைக்கழக மாணவர்கள் ஜல்குபரி பகுதியில் கருப்பு கொடி காட்டினர்.

இன்று, கவுகாத்தியில் உசான் கடைவீதியில் மகாத்மா காந்தி சாலை அசாம் மாணவர் சங்க தலைமையகம் வழியாக பிரதமர் செல்லும்போது அங்கேயும் மாணவர்கள் கொடியசைத்து கோஷங்களை எழுப்பினர்.

பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்து 6 ஆண்டுகளாக வசித்து வரும் இந்துக்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், பவுத்தர்களுக்கு குடியுரிமை வழங்க குடியுரிமை (திருத்தம்) மசோதா கொண்டு வரப்படுகிறது.

கடந்த மாதம் ஜனவரி 8 ம் தேதி குளிர்கால கூட்டத் தொடரில் மக்களவையில் இச்சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. எனினும் மாநிலங்களவையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close