[X] Close
 

நம்புங்க…ஒரே மா மரத்தில்18 வகையான மாம்பழங்கள்: இயற்கை விவசாயத்தில் இளம் விவசாயி சாதனை


18-varieties-of-mangoes-on-single-tree-in-andhra-pradesh

  • போத்திராஜ்
  • Posted: 10 Apr, 2018 14:31 pm
  • அ+ அ-

ஒரு மரத்தில் சிலவகையான மாம்பழங்களை ஒன்றாக விளைவதைப் பார்த்து இருப்போம், கேட்டு இருப்போம், ஆனால், 24வயதான இந்த இளம் விவசாயி, ஒரே மாமரத்தில் 18 வகையான மாம்பழங்களை இயற்கை வேளாண்முறையில் விளைவித்து வருகிறார்.

ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள வட்லமனு கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பல ராமா கோபால கிருஷ்ணா  (வயது24) என்ற  இளம் விவசாயிதான் 18வகையான மாம்பழங்களை ஒரே மரத்தில் விளைவித்துள்ளார்.

இவரின் சாதனை உள்ளூர், அண்டை மாவட்ட விவசாயிகளை மட்டும் ஈர்க்கவில்லை, மாவட்ட கலெக்டர் முதல் அண்டை மாநிலக் கலெக்டர்கள் வரை வந்து இவரின் மாந்தோப்பையும், மாமரத்தையும் அதிசயமாக பார்த்துச் செல்கின்றனர்.

ஒரே மா மரத்தில் 18வகையான மாம்பழங்கள் விளைவிப்பது மிகப்பெரிய சாதனை, அந்த ஒவ்வொரு வகையான மாம்பழமும் ஒவ்வொரு வகையானது என்பதே மாநில தோட்டகலைத்துறையும் உறுதி செய்து கோபால கிருஷ்ணாவுக்கு சான்றிதழ் அளித்துள்ளன.

இது குறித்து விவசாயி குப்பல ராமா கோபால கிருஷ்ண நிருபர்களிடம் கூறியதாவது:

நான் 10-ம் வகுப்புதான் முடித்தேன். என் தந்தை பார்த்த விவசாயத்திலும், மாந்தோப்பிலும் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. 2015-ம் ஆண்டு மாவிளைச்சலும் பொய்த்துப்போனது. இதனால், என் தோப்பில் இருந்த 350 மாமரங்களையும் வெட்ட என் தந்தை முடிவு செய்தார். என் நண்பர்களும், உறவினர்களும் கூட இதை ஆலோசனையை கூறினார்கள்.ஆனால், கஷ்டப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக மாமரங்களை வளர்த்துவிட்டு, அதை வெட்டுவதற்கு மனம்வரவில்லை.

 தோட்டகலைத்துறையின் ஆலோசனையின் பெயரில் பல்வேறு மாமரங்களின் திசுக்களை ஒன்றாக இணைத்து பலவகையான மாம்பழங்களை ஒரே மரத்தில் விளைவிக்கும் தொழில்நுட்பத்தை அறிந்து அதில் செயல்படுத்த முடிவு செய்தேன். இதற்கு இயற்கைமுறை விவசாயத்தையே தேர்வு செய்தேன்.

இயற்கை முறை விவசாயத்தை தேர்வு செய்ததற்கு எனக்கு நன்கு பலன் கிடைத்தது. ஒரே மரத்தில் 18 வகையான மாம்பழங்கள் விளைந்தது. மற்ற 350 மரத்துக்கும் இயற்கை முறை உரங்களை பயன்படுத்தியதால், அவைகளும் நல்ல விளைச்சலைத் தருகின்றன. இயற்கைமுறை விவசாயத்தால், நோய்களும் மரங்களை அதிகமாகத் தாக்குவதில்லை, மாம்பழங்களும் சுவையாகவும், பார்ப்பதற்கு அழகாகவும், சத்துள்ளதாகவும் இருக்கின்றன.

இப்போது என்னுடைய வேளாண் நுட்பங்களை என்னைத் தேடி வரும் விவசாயிகளுக்கு கற்றுக்கொடுத்து வருகிறேன். இப்போது சில மரங்கள் மட்டுமே இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறேன். இனிவரும் காலங்களில் அனைத்து மரங்களிலும் இதே நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளேன்

இவ்வாறு கோபால கிருஷ்ணா தெரிவித்தார்.

இவரின் ஒரே மரத்தில் பங்கனப்பள்ளி, சின்ன ரசம்,பேடா ரசம்,நல்ல ரசம், செருக்கு ரசம், ஹிமாயத், கோபாரி மாமிடி,நுஸ்விடி மாமிடி, அல்போன்ஸா, புனஸா, தசரி,பண்டாரு மாமிடி,கலெக்டர், ஜலம், நீலிஷா,ஸ்வர்ன ரேகா, பஞ்சட ரக்சம், மல்லிகா ஆகிய மாம்பழங்கள் விளைகின்றன.

 

தொடர்புடைய செய்திகள்




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close