[X] Close

பக்கத்து அபார்ட்மெண்டில் தீவிபத்து: 9 தளங்கள் ஓடிச் சென்று தீயை அணைத்த ஏர் ஹோஸ்டஸ் ராதிகா


9

  • க.சே.ரமணி பிரபா தேவி
  • Posted: 07 Feb, 2019 16:47 pm
  • அ+ அ-

விமானத்தில் பணிபுரிந்தாலும் பக்கத்துக்கு அபார்ட்மெண்டில் தீவிபத்து ஏற்பட்டபோது, 9 தளங்கள் ஓடிச்சென்று தீயை அணைத்த ஏர் ஹோஸ்டஸ் ராதிகாவுக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

 

ஜெட் ஏர்வேய்ஸில் பணிபுரியும் ஏர் ஹோஸ்டஸ் ராதிகா அஹிரே கடந்த நவம்பர் மாதம் 7-ம் தேதி வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் வசித்துவந்த அந்தேரியின் டீப் டவர் பகுதிக்கு அருகில் இருந்த  கோகுல் பஞ்ச்வதி கட்டிடத்தின் 9-வது தளத்தில் புகை வந்துள்ளது.  9 தளங்களையும் படிகளில் ஏறிச் சென்ற ராதிகா, கையில் இருந்த கோடரியால் பூட்டப்பட்டிருந்த கதவுகளை உடைத்துத் திறந்தார்.

 

கையோடு கொண்டு சென்ற 9 தீயணைப்பான்களை உடனடியாகச் செலுத்தினார். தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பாகவே வெற்றிகரமாக தீயை அணைத்தார் ராதிகா. அவருக்கு சகோதரர் ரோஹித் மற்றும் அண்ட வீட்டுக்காரர் மகேஷ் உதவினர். இவர்கள் மூவரும் தங்களின் கட்டிடத்தில் இருந்த அனைத்துத் தீயணைப்பான்களையும் கோடரியையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

 

இதுகுறித்து நினைவுகூறும் ராதிகா, ''9-வது தளத்தில் அநாதையாகக் கிடந்த பட்டாசால்தான் தீ விபத்து ஏற்பட்டது. மெல்லத் தொடங்கிய தீ மளமளவெனப் பரவி, திரைச்சீலைகளில் பற்றி எரிந்தது.

 

அங்கிருந்த மக்கள் செய்வதறியாமல், திகைத்து நின்றனர். நாங்கள் மூவரும் லிஃப்டில் செல்வது ஆபத்து என்பதால், ஒன்பது மாடிகளையும் படிகளில் ஓடிச் சென்று கடந்தோம்.

 

என்னுடைய எண்ணமெல்லாம் அங்கிருப்பவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதாகவே இருந்தது. அதிர்ஷ்டவசமாக அபார்ட்மென்டில் ஒருவரும் இல்லை. ஜெட் ஏர்வேய்ஸில் படித்த தீயணைப்புப் பாடம் அன்று உதவிகரமாக இருந்தது'' என்றார்.

 

இதைத் தொடர்ந்து அவர் குடியிருக்கும் கட்டிடத்தில் இருக்கும் மக்கள் அவரின் தைரியத்தைப் பாராட்டி குடியரசு தினத்தன்று விழா நடத்தியுள்ளனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close