[X] Close

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கூடுதல் ஆவணம் சமர்ப்பிக்க ப.சிதம்பரத்துக்கு அனுமதி


inx-media-case

ப.சிதம்பரம் : கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 07 Feb, 2019 10:56 am
  • அ+ அ-

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நிலுவையில் இருக்கும் முன் ஜாமீன் மனு தொடர்பாக கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க ப.சிதம்பரத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2007-ல் ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீடு பெற சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டுள்ளன.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், “வழக்கு தொடர்பாக சிபிஐ என்னை ஒருமுறை மட்டுமே விசாரணைக்கு அழைத்தது. சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் கூட எனது பெயர் இல்லை” என்று கூறியிருந்தார்.

ஆனால் முன் ஜாமீன் வழங்க சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்தது. ப.சிதம்பரம் மழுப்பலாக பதில் அளிப்பதால் அவரை தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரின.

இதையடுத்து மனு மீதான முடிவை கடந்த 25-ம் தேதி நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதனிடையே ப.சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்ய சிபிஐக்கு அனுமதி அளிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சட்டஅமைச்சகம் பரிந்துரை வழங்கியுள்ளதாக கடந்த 3-ம் தேதி ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதன் அடிப்படையில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் நேற்று அனுமதி கோரப்பட்டது. இதற்கு நீதிபதி சுனில் கவுர் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close