[X] Close

பிஹாரில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பு தங்கம் கொள்ளை: துப்பாக்கிகளுடன் வந்த மர்ம மனிதர்கள் கைவரிசை


gold

  • kamadenu
  • Posted: 07 Feb, 2019 07:10 am
  • அ+ அ-

பிஹாரில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள தங்கத்தை துப்பாக்கிகளுடன் வந்த மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

பிஹாரின் முசாபர்பூரில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை உள்ளது. இங்கு தங்க நகைகளை அடமானமாக பெற்றுக்கொண்டு கடன் தரப்படுகிறது. இந்நிலையில் நேற்று இந்தக் கிளைக்கு துப்பாக்கிகளுடன் வந்த மர்ம மனிதர்கள் ரூ.10 கோடி மதிப்புள்ள தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் கண்காணிப்பாளர் மனோஜ் குமார் கூறும்போது, “இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். நிறுவன ஊழியர்களின் வாக்குமூலங்களைப் பெற்று விசாரித்து வருகிறோம். வந்த 6 கொள்ளையர்களிடமும் துப்பாக்கி இருந்துள்ளது. மேலும் நிறுவன மேலாளரை துப்பாக்கி முனையில் நிறுத்தி, லாக்கர்களின் சாவியை எடுத்துச் சென்று கொள்ளையடித்துள்ளனர்.

முன்னதாக நிதி நிறுவனக் காவலாளி மனோஜ் குமார் ஜாவை அடித்துப் போட்டுள்ளனர். நிதி நிறுவனத்தில் தங்கத்தை அடமானம் வைக்க வருவது போல வந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் தங்க நகைகள் இருந்த பைகளுடன் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்” என்றார்.

கொள்ளை போன தங்கத்தின் மதிப்பு ரூ.10 கோடி என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் முசாபர்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

- பிடிஐ

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close