[X] Close

புரி ஜெகன்னாதர் கோயில் விவகாரம்: நிலைமையை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு


puri-jegannath-temple

  • kamadenu
  • Posted: 06 Feb, 2019 09:43 am
  • அ+ அ-

ஒடிசா மாநிலத்திலுள்ள பிரபல புரி ஜெகன்னாதர் கோயில் விவகாரம் தொடர்பாக நிலைமையை நேரில் சென்று ஆய்வு செய்யுமாறு வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புரி ஜெகன்னாதர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோயில்சேவகர்கள் தொந்தரவு கொடுப்பதாகவும், ஏமாற்றுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. மேலும் கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு முறையான வரிசை முறை இல்லை. இதனால் கோயிலில் பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளதாவும் புகார்கள் வந்தன. இதையடுத்து வரிசை முறை அமல்படுத்தப்பட்டது. இதைக் கண்டித்து கடந்த அக்டோபரில் 12 மணி நேர முழு அடைப்பை அங்குள்ள சமூக-கலாசார அமைப்புகள் நடத்தின. இதில் நடந்த வன்முறையில் 9 போலீஸார் காயமடைந்தனர்.

இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தபோது கோயிலுக்கு நீதிமன்றம் சார்பில் ஆலோசகராக கோபால் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் தன்னை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு அவர் கடந்த நவம்பரில் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டு, மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் என்பவர் கடந்த ஜனவரியில் நியமிக்கப்பட்டார்.

இந்த வழக்கு, நேற்று நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கோயிலுக்கு நேரடியாக சென்று அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்து பிப்ரவரி 22, 23-ம் தேதி கோயிலுக்கு சென்று ஆய்வு செய்து நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக ரஞ்சித் குமார் தெரிவித்தார். பின்னர் வழக்கை பிப்ரவரி 27-ம் தேதிக்கு நீதிபதி சிக்ரி ஒத்திவைத்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close