[X] Close

கோவா முதல்வர் உடல்நிலை கவலைக்கிடம்


parikar-in-trouble

  • kamadenu
  • Posted: 06 Feb, 2019 06:54 am
  • அ+ அ-

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டி ருக்கும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக கோவா சட்டப் பேரவைத் துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ நேற்று கூறியதாவது:

ஜனவரி 31-ம் தேதி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிட மாக உள்ளது. கடவுளின் அரு ளால் மட்டுமே அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கோவாவில் மனோகர் பாரிக்கர் முதல்வராக இருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை, ஒருவேளை அவர் பதவியில் இருந்து விலகினாலோ அல்லது அவருக்கு ஏதேனும் நிகழ்ந்தாலோ கோவாவில் மிகப்பெரிய அரசியல் சிக்கல் ஏற்படும் என்ற அச்சம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டு முதல் கணைய பிரச்சினை காரணமாக மும்பை, டெல்லி நகரங்களில் சிகிச்சை பெற்று வந்தார் மனோகர் பாரிக்கர். சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்ற அவர் நியூயார்க் நகரில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்தார்.

இதைத் தொடர்ந்து கோவா திரும்பிய அவர் அரசுப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் உடல்நலம் மோச மானதையடுத்து அவர் கடந்த ஜனவரி 31-ம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவருக்கு டாக்டர் கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் பாரிக்கரின் உடல்நிலை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உள்ளிட்டோர் நலம் விசாரித்துச் சென்றுள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close