[X] Close
 

சிறையில் சல்மான்; பக்கத்து அறையில் பலாத்கார சாமியார் அசாராம் 


asaram-is-salman-s-naighbour

  • பாரதி
  • Posted: 06 Apr, 2018 11:16 am
  • அ+ அ-

மான் வேட்டை வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சல்மான் கான் உடனடியாக ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவரது பக்கத்து அறையில் பாலியல் பலாத்கார வழக்கில் கைதான சாமியார் அசாராம் அடைக்கப்பட்டுள்ளார்.

சல்மான் கான் அடைக்கப்பட்டுள்ள அறையில் கழிப்பறை வசதி இருக்கிறது. ஆனால், அங்கு ஏர் கூலர், ஏசி போன்ற வசதிகள் இல்லை. மின்விசிறி மட்டும் அவருக்குத் தரப்பட்டுள்ளது.
52 வயதான நடிகர் சல்மான் கான், சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை அறிந்து சிறை வாயிலில் பெருமளவில் அவரது ரசிகர்கள் குவிந்தனர். 

சிறையில் கூடுதல் பாதுகாப்பு:
சல்மான் கான் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை அறிந்த கூலிப்படைத் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய், சல்மான் உயிரைப் பறிப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளதால் சிறையில் சல்மான் அடைக்கப்பட்டிருக்கும் அறைக்கு வெளியே பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இயற்கை வழிபாட்டை பின்பற்றுபவர்கள். அவர்கள்தான் சல்மான் கானுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் என்பதால் நேற்று சல்மானுக்கு சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டவுடன் அவர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close