[X] Close

கிராமவாசிகளிடம் நூதன பண மோசடி! ரூ.2000 வங்கிக் கணக்கில் செலுத்தி தூண்டில் 


online-fraud-villagers-fall-for-fake-central-sche

  • பாரதி ஆனந்த்
  • Posted: 14 Jan, 2019 10:48 am
  • அ+ அ-

வங்கிக் கணக்கில் ரூ.2000 செலுத்துவதாகக் கூறி கர்நாடகாவில் கிராமவாசிகளிடம் ஆன்லைனில் நூதன மோசடி நடந்தது தெரியவந்துள்ளது.

கர்நாடகா மாநிலம் ஹொலேன்நரசிபூர் தாலுகாவுக்கு உட்பட்ட கிராமவாசிகளிடம்தான் இந்த மோசடி நடந்திருக்கிறது.

காவி சோமனஹல்லி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு ஃபோனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் பேசியவர் மத்திய அரசின் விவசாயிகளுக்கான திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ரூ.2000 வங்கிக் கணக்கில் செலுத்துவதாகக் கூறி வங்கிக் கணக்கு எண்னைப் பகிருமாறு கேட்டுள்ளார்.

முதலில் அந்த விவசாயி தயக்கம் காட்ட இது பிரதமரின் திட்டம் என்று கூறி அவரை சமாதானம் செய்திருக்கிறார்.

சிறிது நேரத்தில் அந்த விவசாயிக்கு ரூ.2000 வங்கிக் கணக்கில் விழுந்திருக்கிறது. இதனால் ஃபோன் ஆசாமி மீது நம்பிக்கை கொண்ட அந்த நபர் வங்கி விவரங்கள் அனைத்தையும் அந்த நபரிடம் பகிர்ந்திருக்கிறார்.

மேலும் ஊர்க்காரர்களிடமும் இதுபற்றி சொல்லவே பலரும் அந்த எண்ணுக்கு தாமாகவே விரும்பி அழைத்துள்ளனர். எதிர்முனையில் இருப்பவர் வங்கி கணக்கு தொடர்பான விவரங்களைக் கேட்ட மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பணம் வரும் என அனைத்து விவரங்களயும் அளித்துள்ளனர்.

ஆனால், விவரம் அளித்தவர்களின் எண்களில் இருந்து பணம் சென்றுகொண்டே இருக்க பதறிப்போய் அனைவரும் வங்கிக்கு சென்று டெபிட் கார்டை பிளாக் செய்திருக்கின்றனர். 

12 பேர் இப்படி பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இந்த நூதன மோசடி தொடர்பாக யாரும் போலீஸில் புகார் அளிக்கவில்லை.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close