[X] Close

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மகர விளக்கு பூஜை: பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீஸார்


magara-vilakku-poojai-today-in-sabarimala-ayyappan-temple

சபரிமலை ஐயப்பன் கோயில் - Getty Images

  • kamadenu
  • Posted: 14 Jan, 2019 10:18 am
  • அ+ அ-

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி, அங்கு பாதுகாப்புப் பணியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டுள் ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து, அங்கு சில பெண்கள் செல்ல முயன்றதால், இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால், சபரிமலையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இதன் உச்சக்கட்டமாக, ஐயப்பன் கோயிலில் கடந்த 2-ம் தேதி 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் இருவர் சாமி தரிசனம் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா முழுவதும் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதில், கண்ணூர், கோழிக்கோடு உள்ளிட்ட இடங்களில் பெருமளவில் வன்முறை வெடித்தது.

மகரவிளக்கு பூஜை சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை இன்று நடைபெறவுள்ளது. மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டு பல்வேறு சிறப்பு வழிபாடுகளும், ஆராதனைகளும் நடத்தப்பட்டன. இதனிடையே, மகரவிளக்கு பூஜைக்கு சுமார் 18 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை யொட்டி, சபரிமலையில் 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீ ஸார் பாதுகாப்புப் பணியில் ஈடு பட்டுள்ளதாக கேரள காவல்துறை ஏடிஜிபி மனோஜ் ஆபிரஹாம் தெரிவித்துள்ளார்.

மேலும், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தலும் இருப்பதால், விமானப் படை மற்றும் கடற்படை விமானங்கள் மூலம் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஏடிஜிபி மனோஜ் ஆபிரஹாம் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close