[X] Close

மோடிக்கு நீங்கள் வாக்களிப்பதே எங்களுக்குத் தரும் திருமணப் பரிசு: அழைப்பிதழில் மணமக்கள் வேண்டுகோள்


your-vote-for-modi-is-a-wedding-gift-to-us

  • kamadenu
  • Posted: 14 Jan, 2019 09:56 am
  • அ+ அ-

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த யுவராஜ் என்பவருக்கும் சாக்க்ஷி என்ற பெண்ணுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது. மணமக்கள் இருவரும் பாஜகவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் புதுமையான முறையில் தங்கள் திருமண அழைப்பிதழை தயாரித்து, உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அளித்துள்ளனர். அழைப்பிதழின் கீழ் பகுதியில் ‘நமோ’ செயலி மூலம் பாஜகவுக்கு நீங்கள் விரும்பும் நிதி அளிப்பதும் 2019 - மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு வாக்களிப்பதுமே எங்களுக்கு நீங்கள் அளிக்கும் பரிசு என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், பத்திரிகையின் இன்னொரு பக்கத்தில் ரஃபேல் விமான ஒப்பந்தம் நேர்மையாக நடந்துள்ளதாக விளக்கி 9 அம்சங்கள் கூறப்பட்டுள்ளன. விமான ஒப்பந்தத்தில் ரகசிய காப்பு ஒப்பந்தம் இல்லை என்று பிரான்ஸ் அதிபர் தன்னிடம் கூறியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சொன்னதையும் அதை பின்னர், பிரான்ஸ் மறுத்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருபுறங்களிலும் போர் விமானத்தின் படங்களும் இடம் பெற்றுள்ளன. பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு கோரும் இந்த நூதன திருமண அழைப்பிதழ் இணையதளங்களில் வைரலாகி உள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close