[X] Close

மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் 80 தொகுதிகளிலும் தனித்து போட்டி: காங்கிரஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு


up-election

  • kamadenu
  • Posted: 14 Jan, 2019 06:57 am
  • அ+ அ-

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என அக்கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள் ளது.

அதேசமயத்தில், ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்காக, உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் தலைமையி லான சமாஜ்வாதி கட்சியும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இதுதொடர்பான அறிவிப்பை, அகி லேஷ் யாதவும், மாயாவதியும் நேற்று முன்தினம் கூட்டாக வெளியிட்டனர். அம்மாநிலத்தில் தலா 38 இடங்களில் அக்கட்சிகள் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

அத்துடன், தங்கள் கூட்டணியில் காங்கிரஸுக்கு இடமில்லை என இரு கட்சி தலைவர்களும் திட்டவட்டாக தெரிவித்தனர். இது, காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது.

ஆலோசனைக் கூட்டம்

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் தொடர்பாக லக்னோவில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடை பெற்றது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் தலைமையில்நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உத்தரபிரதேசத்தில் மக்களவைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கூட்டணிக்கும் தயார்

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு, குலாம் நபி ஆசாத் அங்கிருந்த செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எதிர்வரும் பொதுத்தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும். அதேசமயத்தில், காங்கிரஸுடன் ஒத்த கருத்துடைய மதசார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

உத்தரபிரதேசத்தில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் பெரு வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதேபோல், இந்த தேர்தலிலும் அம்மாநிலத்தில் நாங்கள் அபார வெற்றி பெறுவோம்.

இவ்வாறு குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close