[X] Close

குஜராத் என்கவுன்ட்டர் சம்பவம் இனப்படுகொலை அல்ல: விசாரணை அறிக்கையில் தகவல்


gujarat-encounter

  • kamadenu
  • Posted: 13 Jan, 2019 11:23 am
  • அ+ அ-

குஜராத்தில் நடந்த என்கவுன்ட்டர் சம்பவம் குறிப்பிட்ட மதத்தினரை குறிவைத்து நடத்தப்பட்ட இனப்படுகொலை அல்ல என்று விசாரணை ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2002 முதல் 2006-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் காவல்துறையினரால் 17 என்கவுன்ட்டர் சம்பவங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், இவையனைத்தும் போலி என்கவுன்ட்டர்கள் என்றும், குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் இதில் குறிவைத்து கொல்லப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், குஜராத்தில் நடந்த என்கவுன்ட்டர்கள் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஹெச்.எஸ். பேடி தலைமையில் குழு அமைத்தது.

இந்தக் குழுவானது, உச்ச நீதிமன்றத்தில் தனது அறிக்கையை அண்மையில் தாக்கல் செய்தது. அதில், "குஜராத்தில் நடந்த என்கவுன்ட்டர் சம்பவங்களில் பல்வேறு குற்றப் பின்னணிகளைக் கொண்ட நபர்களே கொல்லப்பட்டுள்ளனர். எனவே, இதனை ஒரு இனப்படுகொலையாக கருத முகாந்திரம் இல்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close