[X] Close

திருநங்கை பிரச்சினைகளை மட்டுமே பேச விரும்பவில்லை: மகளிர் காங். செயலர் அப்சரா விருப்பம்


apsara-transgender

  • kamadenu
  • Posted: 13 Jan, 2019 11:19 am
  • அ+ அ-

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டி (35) அண்மையில் நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் வரலாற்றில் திருநங்கை ஒருவர் தேசிய நிர்வாகியாக நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். பத்திரிகையாளரும், சமூக செயற்பாட்டாளருமான அப்சரா ரெட்டி சென்னையை சேர்ந்தவர் ஆவார்.

இந்நிலையில் பத்திரிகையாளர் ஒருவருக்கு அப்சரா ரெட்டி அளித்த பேட்டியில் கூறியதாவது:நான் திருநங்கை என்பதால் திருநங்களைகளின் பிரச்சினைகளை மட்டுமே பேச விரும்பவில்லை. நாட்டின் குடிமகனாக என்னை பாதிக்கும் அரசின் எந்தக் கொள்கையையும் அதாவது அடிப்படை கட்டமைப்பு, சுகாதாரம், வரிவிதிப்பு என அனைத்து பிரச்சினைகளையும் பேச விரும்புகிறேன். பெண்கள், குழந்தைகள் மற்றும் திருநங்கைகளை பாதிக்கும் அரசின் கொள்கைகள் மீதான விரிவான விவாதத்தில் நானும் பங்கேற்க விரும்புகிறேன்.

தலைமைப் பண்புள்ள பெண்களை அடையாளம் கண்டு அவர்களை வளர்த்தெடுக்க எனக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் மகளிர் காங்கிரஸ் சார்பில் மாவட்ட, வட்டார மற்றும் உள்ளூர் அளவில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தவுள்ளேன். இவ்வாறு அப்சரா ரெட்டி கூறினார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close