[X] Close

பணியிட மாறுதல் பட்டியலில் இறந்துபோன அதிகாரியின் பெயர்: மன்னிப்பு கோரிய டிஜிபி


up-cop-who-died-last-month-appears-in-transfer-list-top-cop-apologises

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Jan, 2019 15:13 pm
  • அ+ அ-

போன மாதமே இறந்துபோன அதிகாரிக்கு பணியிட மாறுதல் உத்தரவு வழங்கி சர்ச்சையில் சிக்கியிருக்கிறது காவல்துறை.

உத்தரப் பிரதேச மாநில போலீஸ் உயரதிகாரிகள் பணியிட மாறுதல் உத்தரவு அறிக்கையில்தான் இப்படி இறந்துபோன அதிகாரியின் பெயர் இடம் பெற்று சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இதற்காக அம்மாநில காவல்துறை டிஜிபி மன்னிப்பு கோரியுள்ளார். இது உ.பி. போலீஸாருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சத்ய நாராயண் சிங் என்ற அதிகாரி டி.எஸ்.பி.யாக இருந்துள்ளார். அவர் கடந்த மாதமே இறந்துவிட்ட நிலையில் அவரது பெயரும் நேற்று வெளியான பணியிட மாறுதலுக்கான பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.

இது குறித்து உத்தரப் பிரதேச டிஜிபி ஓ.பி.சிங், "இது வருந்தத்தக்க விஷயம். பணியிட மாறுதல் உத்தரவு அறிவிப்பில் இறந்துபோன டிஎஸ்பி சத்ய நாராயண் சிங்கின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. இத்தகைய தவறுக்கு மன்னிப்பு இல்லை.

காவல்துறை தலைவராக இதற்காக மன்னிப்பு கேட்கிறேன். இனி வருங்காலங்களில் இதுபோன்று தகவல் குளறுபடி ஏற்படாமல் இருக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close