[X] Close

கற்கள் வீசினால் தோட்டாக்களால் பதில் சொல்வேன்: அதிர வைத்த பகுஜன் சமாஜ் வேட்பாளர்


i-respond-to-stones-with-ak-47

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Jan, 2019 14:07 pm
  • அ+ அ-

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் ராம்கர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அத்தொகுதியில் பிரச்சாரம் செய்த பகுஜன் சமாஜ் வேட்பாளரின் கருத்து சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பகுஜன் சமாஜ் வேட்பாளர் ஜகத் சிங், "அன்று 200 பேர் ஆபத்தில் இருந்தனர். அப்போது பாஜக எங்கு சென்றிருந்தது. நான் அந்த 200 பேரையும் பாதுகாக்கச் சென்றேன். துப்பாக்கிச் சூடு நடந்தால் முதல் குண்டு எனது மார்பில் பாயும். கற்களுக்கு ஏகே-47 தோட்டக்களால் பதில் சொல்வேன். அசோக் கெலாட், நரேந்திர மோடி, வசுந்தரா ராஜே என யாராக இருந்தாலும் எல்லோரையும் மூட்டைக் கட்டிக்கொண்டு வீட்டுக்குச் செல்ல வைப்பேன்" என்று பேசியிருக்கிறார்.

அவரது இந்த பேச்சு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

ஜகத் சிங் காங்கிரஸ் மூத்த தலைவர் நட்வர் சிங்கின் மகன். இவர் ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்தார். பின்னர் பாஜகவில் இருந்தார். கடந்த தேர்தலில் அவருக்கு பாஜக சீட் தரவில்லை. இதனால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து இடைத்தேர்தலை எதிர்கொள்கிறார்.

பாஜகவில் இருந்தபோது பிரதமர் மோடியையும், அமித்ஷாவை, வசுந்தரா ராஜேவையும் புகழ்ந்து பேசியவர் இப்போது கட்சி மாறியவுடன் இப்படி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close