[X] Close

என்.டி.ஆராக வாழ்ந்து காட்டி விட்டாய்: நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு சந்திரபாபு நாயுடு பாராட்டு


chandrababu-naidu-to-praise-balakrishna

என்.டி.ஆர் திரைப்படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக நடிகர் பாலகிருஷ்ணாவையும், இத்திரைப்படத்தின் இயக்குநர் கிரீஷையும் நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெகுவாக பாராட்டினார்.

  • kamadenu
  • Posted: 12 Jan, 2019 12:11 pm
  • அ+ அ-

மறைந்த ஆந்திர முதல்வரும், பழம்பெரும் நடிகருமான என்.டி.ராமாராவின் பயோபிக் (உண்மைக்கதை) சமீபத்தில் ஆந்திரா, தெலங்கானா மட்டுமின்றி, உலகமெங்கும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இத்திரைப்படத்தில் என்.டி.ஆர் வேடத்தில் நடித்த அவரது மகனும் பிரபல நடிகருமான பாலகிருஷ்ணாவையும், இத்திரைப்படத்தின் இயக்குனர் கிரிஷையும் நேற்று ஆந்திர முதல்வர் வெகுவாக பாராட்டினார்.

என்.டி.ராமாராவின் உண்மைக்கதை ‘என்.டி.ஆர் கதாநாயக்குடு’ எனும் பெயரில் நேற்று முன் தினம் ஆந்திரா, தெலங்கானா உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் சுமார் 1,500 திரையரங்குகளில் வெளியானது. இதில் என்.டி.ஆர் கதாபாத்திரத்தை, இவரது மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா ஏற்று நடித்துள்ளார்.

மேலும், இத்திரைப்படத்தில் வித்யா பாலன், ராணா, சுமந்த், கல்யாண் ராம், ரகுல்ப்ரீத் சிங், உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை நேற்று முன் தினம் இரவு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாலகிருஷ்ணா, இயக்குநர் கிரிஷ் ஆகியோர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு பார்த்தனர்.

இந்த படத்தை பார்த்த சந்திரபாபு நாயுடு, இதில் என்.டி.ஆராக நடித்த நடிகர் பாலகிருஷ்ணாவை பார்த்து, “என்.டி.ஆராகவே வாழ்ந்து காட்டிவிட்டாய்” என வெகுவாக பாராட்டினார். மேலும், இந்த படத்தின் இயக்குநர் கிரிஷையும் சந்திரபாபு நாயுடு பாராட்டினார். இதனை தொடர்ந்து நேற்று காலை, மீண்டும், நடிகர், பாலகிருஷ்ணா, இயக்குநர் கிரீஷை அழைத்து, சிறந்த படத்தை கொடுத்ததற்காக பாராட்டி, பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close