[X] Close

33 ஆண்டுகளாக வெறும் டீ மட்டுமே குடித்து வாழும் பெண்


this-chattisgarh-women-is-surviving-on-tea-for-33-years

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Jan, 2019 11:27 am
  • அ+ அ-

33 ஆண்டுகளாக வெறும் டீ மட்டுமே குடித்து வாழும் பெண் ஒருவர் சத்தீஸ்கரில் வசிக்கிறார்.

பொதுவாக குளிர் காலத்தில் காலை எழுந்தவுடன் சுடச்சுட ஒரு கோப்பை தேநீர் பருகுவது இதமாக இருக்கலாம். வழக்கமான ஒரு வேளையைக் காட்டிலும் குளிர் நடுக்கும்போதெல்லாம் கொஞ்சம் தேநீர் பருகுவது சுகமாக அமையலாம்.

ஆனால் தேநீர் மட்டுமே பருகி வாழ முடியுமா? சத்தீஸ்கரில் அப்படி ஒரு பெண் வசிக்கிறார்.

சத்தீஸ்கர் மாவட்டர் பாராடியா கிராமத்தில் வசிகிறார் பில்லி தேவி. இவர் தனது 11-வது வயதிலிருந்தே வெறும் தேநீர் மட்டுமே பருகிவருகிறார். அப்போது அவர் 6-ம் வகுப்பு படித்துவந்தார். இப்போது அவருக்கு வயது 44. உள்ளூரில் அவருக்குப் பெயர் சாய்வாலி சாச்சி (Chai wali cahchi)

இவரைப் பற்றி இவரது தந்தை ரதி ராம், "என் மகள் 6-ம் வகுப்பு படிக்கும்போது உணவு அருந்துவதை நிறுத்திவிட்டார். பாட்னா பள்ளி சார்பாக மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள சென்றார். அதிலிருந்து திரும்பிய பின்னர் அவர் உணவு அருந்துவதை, தண்ணீர் பருகுவதை நிறுத்திவிட்டார்.

ஆரம்பத்தில் பால் கலந்த டீயுடன் பிஸ்கெட், பிரெட் சாப்பிடார். பின்னர் பிளாக் டீக்கு மாறிவிட்டார். அதுவும் ஒவ்வொரு நாளும் சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னர் ஒரு குவளை பிளாக் டீ அருந்துகிறார்" என்றார்.

பில்லியில் சகோதரர் பிஹாரி லால் ராஜ்வாடே கூறும்போது, "எனது சகோதரியின் இந்த வினோத பழக்கத்தால் அவருக்கு உடல்நலக் கேடு ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் அவரை பல்வேறு மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றுவிட்டோம். ஆனால், எந்த மருத்துவரும் அவரது வினோத பழக்கத்தின் பின் வேறு ஏதும் உடல் நலக் குறைபாடு இருப்பதாக உறுதி செய்ய முடியவில்லை" எனக் கூறினார்.
இது மட்டுமல்ல பில்லி எப்போதாவதுதான் வீட்டை விட்டு வெளியே வருவார். மற்ற நேரங்களில் அவர் சிவனை வணங்கிக் கொண்டு வீட்டினுள்ளேயே இருந்துவிடுவார்.

இது தொடர்பாக கோரியா மாவட்ட மருத்துவமனை மருத்துவர் எஸ்.கே.குப்தா கூறும்போது, "இது ஆச்சர்யமளிக்கிறது. சாதாரணமாக எந்த ஒரு நபராலும் 33 ஆண்டுகள் வெறும் டீயை மட்டுமே குடித்து உயிர்வாழ இயலாது. நவராத்திரியின் போது 9 நாட்கள் சிலர் டீ மட்டுமே அருந்தி விரதம் மேற்கொள்வார். ஆனால், 33 ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம். இது நிச்சயம் சாத்தியமில்லை" என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close