[X] Close

அஸ்தானாவை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு


high-court-order-to-investigate-asthana

  • kamadenu
  • Posted: 12 Jan, 2019 10:22 am
  • அ+ அ-

கட்டாய விடுப்பில் இருக்கும் சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவை லஞ்ச வழக்கில் விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அவரை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையையும் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

1984-ம் ஆண்டு, குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ராகேஷ் அஸ்தானா, கடந்த 2107–ம் ஆண்டு அக்டோபரில் சிபிஐ சிறப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டார். இவர் மீது ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ்பாபு சனா லஞ்சப் புகார் அளித்தார். இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி தொடர்புடைய வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க அஸ்தானா ரூ.2 கோடி பெற்றதாக குற்றம்சாட்டினார். இதன் பேரில் ராகேஷ் அஸ்தானா, டிஎஸ்பி தேவேந்திர குமார், இடைத்தரகர் மனோஜ் பிரசாத் உள்ளிட்டோர் மீது அப்போதைய சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மூவரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி நஜ்மி வாஜிரி முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அஸ்தானா உள்ளிட்டோர் மீதான லஞ்ச வழக்கை ரத்து செய்ய நீதிபதி மறுத்துவிட்டார். இந்த வழக்கில் ராகேஷ் அஸ்தானாவை கைது செய்ய ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தடையையும் நீதிபதி ரத்து செய்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close