[X] Close

சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் பதவியேற்பு: அலோக் வர்மாவின் இடமாற்ற உத்தரவுகள் ரத்து


cbi-director-nageswara-rao-sworn-in

எம்.நாகேஸ்வர ராவ்

  • kamadenu
  • Posted: 12 Jan, 2019 10:19 am
  • அ+ அ-

சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மா நீக்கப்பட்டதை தொடர்ந்து, சிபிஐ கூடுதல் இயக்குநர் எம்.நாகேஸ்வர ராவ் மீண்டும் இடைக்கால இயக்குநராக பொறுப்பேற்றார். பரஸ்பர லஞ்சப் புகார் காரணமாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரையும் மத்திய அரசு கடந்த அக்டோபர் 23-ம் தேதி இரவு கட்டாய விடுப்பில் அனுப்பியது. சிபிஐ கூடுதல் இயக்குநராக இருந்த எம்.நாகேஸ்வர ராவை, இடைக்கால இயக்குநராக நியமித்தது.

இதற்கு எதிரான வழக்கில், மத்திய அரசின் உத்தரவை உச்ச நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது. சிபிஐ இயக்குநரை தேர்வு செய்யும் உயர்நிலைக் குழுவே இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க முடியும் என தெளிவுபடுத்தியது.

இதையடுத்து பிரதமர் மோடி, நீதிபதி ஏ.கே.சிக்ரி, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை கொண்ட உயர்நிலைக் குழு நேற்று முன்தினம் கூடியது. இதில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மா நீக்கப்பட்டார். அவர் தீயணைப்பு துறை இயக்குநர் பதவிக்கு மாற்றப்பட்டார்.

இதையடுத்து சிபிஐ கூடுதல் இயக்குநர் எம்.நாகேஸ்வர ராவ் நேற்று மீண்டும் இடைக்கால இயக்குநராக பொறுப்பேற்றார். கடந்த செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அலோக் வர்மா மீண்டும் சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்றபோது, பல்வேறு இடமாற்ற உத்தரவுகளை பிறப்பித்தார். இந்த உத்தரவுகள் அனைத்தையும் நாகேஸ்வர ராவ் ரத்து செய்தார்.

அலோக் வர்மா ராஜினாமாஅலோக் வர்மா நேற்று முன்தினம் இரவு கூறும்போது, “எனக்கு எதிரான ஒருவர் (ராகேஷ் அஸ்தானா) கூறிய பொய்யான, ஆதாரமற்ற மற்றும் அற்பமான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளேன்” என்றார்.

இந்நிலையில் புதிய பணியில் சேர அலோக் வர்மா நேற்று மறுத்துவிட்டார். இது தொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறைக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,“தீயணைப்பு துறை இயக்குநருக்கான வயது வரம்பை கடந்துவிட்டதால் நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றதாக கருத வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அலோக் வர்மா ஏற்கெனவே கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதியே அரசுப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். எனினும் சிபிஐ இயக்குநராக அவர் 2 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close