[X] Close

சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கு: நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கைத் தாக்கல்


cbi-saradha-chitfund-scam-nalini-chidambaram-chargesheet

  • முத்துக்குமார்
  • Posted: 11 Jan, 2019 18:52 pm
  • அ+ அ-

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் சாரதா குழும நிறுவனத்திடமிருந்து ரூ.1.4 கோடி பெற்றதான புகாரின் பேரில் அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது சிபிஐ. 

சாரதா குழும உரிமையாளர் சுதிப்தா சென்னுடன் நளினி சிதம்பரம் கிரிமினல் சதியில் ஈடுபட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. அதாவது ஏமாற்று மோசடி வழக்கில் நளினி சிதம்பரத்தைச் சேர்த்துள்ள சிபிஐ அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 

முன்னாள் மத்திய அமைச்சர் மாதங் சின்ஹ் என்பவரின் மாஜி மனைவி மனோரஞ்சனா சின்ஹ் என்பவரே சாரதா குழும உரிமையாளர் சுதிப்தா சென்னுக்கு நளினி சிதம்பரத்தை அறிமுகம் செய்து வைத்ததாகவும், அதாவது செபி, ஆர்.ஓ.சி ஆகிய அமைப்புகளின் விசாரணையை நிர்வகிக்க நளினி சிதம்பரம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார் என்றும் இதனையடுத்து நளினி சிதம்பரம் ரூ.1.4 கோடி தொகைப் பெற்றதாகவும் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

குற்றப்பத்திரிக்கை கொல்கத்தா சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சாரதா குழுமம் அதிக வட்டி ஆசை காட்டி பொதுமக்களிடமிருந்து ரூ.2500 கோடி நிதி திரட்டியது. மக்களுக்கு அப்பணம் திருப்பித் தரப்படவில்லை.  2013-ல் நிறுவனத்தை சென் மூடினார்.  இது மிகப்பெரிய ஊழல் என்று பாஜக, கம்யூனிஸ்ட்கள் அங்கு கடும் விமர்சனங்களை எழுப்பினர்.

2014-ல் சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த வழக்கில் இது 6வது குற்றப்பத்திரிக்கையாகும்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close