[X] Close

லஞ்சம் வாங்கிய போலீஸ்!- வேலையை பறித்துவிடுவதாக எச்சரித்த அமைச்சர்


watch-what-this-rajasthan-minister-did-after-he-heard-cop-extorts-money

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Jan, 2019 11:26 am
  • அ+ அ-

சுங்கச்சாவடியில் நின்று கொண்டு பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கியதாக சர்ச்சையில் சிக்கிய போலீஸ்காரரை லஞ்சம் வாங்குவதை நிறுத்துவீர்களா? இல்லை வேலையை காலி செய்யவா? என்று மிரட்டி எச்சரித்திருக்கிறார் அமைச்சர் ஒருவர்.

ராஜாஸ்தான் மாநிலத்தில் அண்மையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அங்கு இப்போது காங்கிரஸ் ஆட்சி நிலவுகிறது.

அம்மாநில இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அசோக் சந்தனாவுக்கு புண்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள் குறிப்பிட்ட காவல் அதிகாரியின் செயல்பாடு தொடர்பாக புகார் கொடுத்துள்ளனர்.

அந்தக் காவலர் சுங்கச் சாவடி வழியாக போகும் வரும் மக்களை மறித்து குறைந்தது ரூ.100 என்ற வீதத்தில் லஞ்சம் வசூலிப்பதாக புகார் கூறினர்.

இதனையடுத்து அந்த காவலரை அழைத்துப் பேசிய அமைச்சர் அவரை கடுமையாக எச்சரிக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

இது தொடர்பாக அமைச்சர் பேசியதாவது:

"நீங்கள் சுங்கச்சாவடியில் நின்றுகொண்டு லஞ்சம் வசூலிக்கிறீர்கள் என்று புகார் வந்திருக்கிறது. அப்படி செய்கிறீர்களா? உங்கள் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் உங்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டு சுங்கச்சாவடியில் பணியமர்த்திவிடுவேன். ஏழை மக்களிடம் இனியும் 100 ரூபாய் வசூலில் ஈடுபட்டால் உங்கள் வேலை பறிபோவது உறுதி. இதுதான் எனது கடைசி எச்சரிக்கை என நினைத்துக் கொள்ளுங்கள்" எனக் கூறுகிறார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close