[X] Close

பிரதமர் மோடியுடன் பாலிவுட் நட்சத்திரங்கள் சந்திப்பு


modi-meets-bollywood

  • kamadenu
  • Posted: 11 Jan, 2019 10:01 am
  • அ+ அ-

புதுடெல்லி

பிரதமர் நரேந்திர மோடியை இந்தி திரையுலக நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள் நேற்று சந்தித்தனர். மோடியுடன் அவர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.

டெல்லியில் பிரதமர் மோடியை நடிகர் அக்க்ஷய் குமார், தயாரிப்பாளர் கரன் ஜோஹர் உள்ளிட்ட இந்தி திரையுலகினர் கடந்த மாதம் சந்தித்தனர். அவர்களுடன் திரையுலகம் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசித்தார். இதையடுத்து, தியேட்டர்களில் டிக்கட் கட்டணங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் மோடியை இந்தி திரையுலகின் பிரபல நடிகர்களான ரன்வீர் சிங், ரன்பிர் கபூர், வருண் தவான், நடிகை ஆலியா பட், புமி பட்நாகர், தயாரிப்பாளர் மஹாவீர் ஜெயின், இயக்குநர் ரோஹித் ஷெட்டி உள்ளிட்டோர் நேற்று சந்தித்துப் பேசினர்.

ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு நன்றி

மோடியுடன் அவர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர். சந்திப்பின்போது திரைத்துறையின் நலன்கள் பற்றி மோடியுடன் அவர்கள் ஆலோசித்ததுடன் தியேட்டர் டிக்கட் கட்டணங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்புக்கு தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஏற்பாடு செய்ததாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close