[X] Close

எதையும் தீர்மானிக்க முடியாதவனாக, அறியாதவனாக, தெளிவற்றவனாக இருந்தேன்; 17 வயதில் வாழ்க்கையை தேடி இமயமலை சென்றேன்: பிரதமர் நரேந்திர மோடியின் மலரும் நினைவுகள்


modi-life

  • kamadenu
  • Posted: 11 Jan, 2019 09:59 am
  • அ+ அ-

‘‘வாழ்க்கையின் தேடல் மீதான ஆர்வம் 17 வயதிலேயே தொடங்கிவிட்டது. அதற்காக இமயமலைக்குச் சென்றேன்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு, ‘ஹியூமன்ஸ் ஆப் பாம்பே’ என்ற நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறு வனத்தினர், முக்கிய பிரமுகர்களின் வாழ்க் கையில் நடந்த உண்மை சம்பவங்களை கேட்டறிந்து தங்களது ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில், ‘ஹியூமன்ஸ் ஆப் பாம்பே’ குழுவினரிடம் தனது வாழ்க்கையில் நடந்த மிக முக்கிய சம்பவங்களை மலரும் நினைவுகளாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அவர் கூறிய தகவல்கள் 5 பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பாகம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அதில், சிறுவனாக இருந்த போது ரயில் நிலையத்தில் தந்தையின் டீக்கடையில் உதவியாக இருந்தது உட்பட பல சுவாரசிய மான தகவல்களை மோடி கூறியிருந்தார்.

இந்நிலையில், 2-வது பாகம் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:

வாழ்க்கையின் தேடல் மீதான ஆர்வம் 17 வயதில் அதிகமாக இருந்தது. பயணத்தின் மீது எனக்கு ஆசை. எங்காவது போக வேண்டும் என்று நினைப்பேன். ஆனால், எங்கு போக வேண்டும், என்ன செய்ய வேண்டும், ஏன் செய்ய வேண்டும் என்று பல கேள்விகள் என்னுள் எழுந்தன. ஆனால், எதையாவது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். எனக்குள் தெளிவு ஏற்படவில்லை. அந்தத் தெளிவை பெற விரும்பினேன். வாழ்க்கையில் எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பதை அறிய முயற்சித்தேன்.

அந்த வயதில் இமயமலை சென்று விட்டேன். ஒரு பயணியாக, மாறினேன். என்னைப் பற்றியும் இந்த உலகத்தைப் பற்றியும் அறிய வேண்டும் என்ற கேள்வி களுக்கு விடைகள் தேடும் இளை ஞனாக சென்றேன். அப்போது எதையும் தீர்மானிக்க முடியாதவனாக, அறியாத வனாக, தெளிவற்றவனாக இருந்தேன். இமயமலையில் 2 ஆண்டுகள் தங்கியிருந் தேன். அந்த நாட்களில் வெளியுலகைப் புரிந்து கொண்டது மட்டுமல்லாமல், எனக் குள்ளும் நான் பயணித்துக் கொண்டி ருந்தேன்.

நான் வளர்ந்து வரும் வேளையில் பல விஷயங்களில் ஆர்வம் இருந்தது. ஆனால், தெளிவுதான் இல்லை. ரயில் நிலையத்தில் சாதுக்கள், துறவிகளுடன் பேசிய அனுபவம், ஆழ்ந்த சிந்தனையை எனக்குள் வளர்த்தது.

ராணுவ வீரர்களை சீருடையில் பார்ப்பேன். அப்போது, இந்த நாட்டுக்கு சேவை செய்ய இதுதான் ஒரே வழி என்று நினைப்பேன். இப்படி சிந்திப்பதுகூட மிகப்பெரிய கண்டுபிடிப்புதான் என்பதை புரிந்து கொண்டேன்.

இமயமலையில் அதிகாலையில் கண்விழித்து விடுவேன். சில்லிடும் நீரில் குளித்து முடிப்பேன். சாதுக்களுடன் வாழ்ந்து வந்தேன். இந்தப் பிரபஞ்ச இயக்கத்துடன் என்னை ஒழுங்குபடுத்திக் கொள்வது எப்படி என்பதை அவர்கள் கற்றுத் தந்தார்கள். கடவுள் என்னை எங்கெல்லாம் அழைத்து செல்ல வேண்டும் என்று விரும்பினாரோ, அங்கெல்லாம் சென்றேன். என் வாழ்க்கையில் எது ஒன்றையும் தீர்மானிக்க முடியாத கால கட்டம்தான் அது. ஆனால், இப்போதும் பல பதில்களை அளித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இமயமலையில் அமைதி, ஒருமை, தியானம் ஆகியவற்றை காணலாம். நீர்வீழ்ச்சியில் இருந்து எழும் சாதாரண ஒலியில் இருந்து கூட இவற்றை உணர முடியும். அவற்றை எல்லாம் நான் கற்றுக் கொண்டேன். அங்கு நான் கற்றுக்கொண்ட பல விஷயங்கள் இப்போதும் எனக்கு தொடர்ந்து உதவிக் கொண்டிருக்கின்றன. நமது எண்ணங்களாலும், வரம்புகளாலும் நாம் பிணைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டேன்.

பிரம்மாண்டத்தின் முன்பு நீங்கள் சரணடைந்து, அதன் முன்பு நிற்கும்போது, பரந்த இந்தப் பிரபஞ்சத்துக்கு முன்பு நீங்கள் எவ்வளவு சிறியவர் என்பதை அறிவீர்கள். அதை நீங்கள் புரிந்து கொண்டால், உங்களுக்குள் அகந்தை ஏதாவது இருந்தால் காணாமல் போகும். அப்போது வாழ்க்கை உண்மையாகவே தொடங்கிவிடும்.

வாழ்க்கையை வழிநடத்தி செல்லும் சக்தியை அறிந்த பிறகு, எனக்குள் நான் தெளிவு பெற்ற பிறகு இமயமலையில் இருந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு வீடு திரும்பினேன்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close