[X] Close

மீண்டும் முத்தலாக் தடை அவசர சட்டம்: அமைச்சரவை ஒப்புதல்


muthalak

  • kamadenu
  • Posted: 11 Jan, 2019 06:42 am
  • அ+ அ-

முத்தலாக் தடை அவசர சட்டத்தை மீண்டும் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை நேற்றிரவு ஒப்புதல் அளித்தது.

முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஆண்கள், 3 முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறை அமலில் இருந்து வருகிறது. இந்த முத்தலாக் விவாக ரத்து அரசமைப்பு சாசனத்துக்கு எதிரானது. இதனை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் இயற்றும்படி உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது

இதையடுத்து முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள், பாதுகாப்பு) மசோ தாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த மசோதா மக்களவையில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பரில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் மாநிலங்களவையில் மசோதா முடங் கியது.

இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பரில் முத்தலாக் நடைமுறைக்கு தடை விதித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இதன்பிறகு எதிர்க்கட்சிகளின் கோரிக் கையை ஏற்று மசோதாவில் 3 முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டன. முத்தலாக் விவகாரத்தில் மனைவி மற்றும் உறவினர்கள் மட்டுமே வழக்குத் தொடர முடியும். மைனர் குழந்தைகள் இருந்தால் மனைவியிடம் ஒப்படைக்க வேண்டும். கணவனுக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக மாஜிஸ்திரேட் முடிவெடுக்கலாம் என்று திருத்தங்கள் செய்யப்பட்டன.

திருத்தப்பட்ட மசோதா நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா கடந்த ஆண்டு டிசம்பரில் மக்களவையில் நிறைவேற் றப்பட்டது. எனினும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியால் மசோதாவை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு வுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சி கள் வலியுறுத்தி வருகின்றன.

இந்தப் பின்னணியில் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்படாமல் நாடாளு மன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 9-ம் தேதி நிறைவடைந்தது.

கடந்த செப்டம்பரில் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் 6 மாதங்களுக்கு மட்டும் செல்லுபடியாகும். ஆனால் அவசர சட்டம் பிறப்பித்த பிறகு நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கினால் அடுத்த 42 நாட்களில் அவசர சட்டத்துக்கு மாற் றாக சட்டம் இயற்ற வேண்டும். இல்லா விட்டால் அது காலாவதியாகிவிடும். இதன்படி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் முடிந்துவிட்டதால் வரும் 22-ம் தேதி முத்தலாக் தடை அவசர சட்டம் காலாவதியாக உள்ளது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இதில் மீண்டும் முத்தலாக் தடை அவசர சட்டம் பிறப்பிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close