[X] Close

10% இட ஒதுக்கீட்டை  எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு


supreme-court-case

  • kamadenu
  • Posted: 11 Jan, 2019 06:34 am
  • அ+ அ-

கல்வி, வேலைவாய்ப்பில் உயர் சாதி ஏழைகளுக்கு (பொது பிரிவினர்) 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அரசு வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்வி நிறுவன சேர்க்கையில், எஸ்சி, எஸ்டி, ஓபிசி உள்ளிட்ட பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய வர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை கடந்த 7-ம் தேதி ஒப்புதல் வழங்கியது. ஆனால், இந்த இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டுமானால் அரசியல் சாசன சட்டத்தின் 15 மற்றும் 16-வது பிரிவில் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

இதன்படி, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித் தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் அரசியல் சாசன (124-வது சட்டத் திருத்த) மசோதா 2019-ஐ மக்களவையில் 8-ம் தேதி தாக்கல் செய்தார். நீண்ட விவாதத்துக்குப் பிறகு இந்த மசோதா நிறை வேற்றப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் மாநிலங்களவையிலும் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேறியது.

இந்நிலையில், இந்த மசோதாவை எதிர்த்து ‘சம உரிமைக்கான இளைஞர்’ என்ற தொண்டு அமைப்பு மற்றும் கவுஷல் காந்த் மிஸ்ரா ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவில், “இந்திரா சாவ்னே வழக்கில் 1992-ல் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பின்படி, பொருளாதார நிலையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இட ஒதுக்கீடு வழங்க முடியாது. இதன்படி, அரசியல் சாசன (124-வது சட்டத் திருத்த) மசோதா அரசியல் சாசனத்தின் அடிப் படை கட்டமைப்பை மீறுவதாக உள்ளது. மேலும் இதே வழக்கில் நிர்ணயிக்கப்பட்ட இட ஒதுக்கீடு உச்ச வரம்பை (50%) மீறுவதாகவும் உள்ளது. எனவே, இந்த மசோதாவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

பிடிஐ

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close