[X] Close

டெல்லி காங்கிரஸ் தலைவரானார் ஷீலா தீட்சித்


sheila-dixit-becomes-delhi-congress-chief

  • பாரதி ஆனந்த்
  • Posted: 10 Jan, 2019 18:39 pm
  • அ+ அ-

டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் அம்மாநில காங்கிரஸ் தலைவரானார்.

டெல்லி காங்கிரஸ் தலைவராக இருந்த அஜய் மாக்கென் ராஜினாமா செய்த நிலையில் எதிர்பார்க்கப்பட்டது போலவே ஷீலா தீட்சித் காங்கிரஸ் தலைவராக்கப்பட்டிருக்கிறார்.

டெல்லி முன்னாள் அமைச்சர் ஹாரூன் யூசுப், தேவேந்தர் யாதவ், ராஜேஷ் லிலோதியா ஆகியோர் காங்கிரஸ் செயல்தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

காங்கிரஸ் கட்சியின் டெல்லி பிரதேச பொதுச் செயலாளர் பி.சி.சாக்கோ இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஷீலா தீட்சித், "கட்சி எனக்கு இந்தப் பதவியை கொடுத்திருப்பதில் கவுரவம் கொள்கிறேன்" என்றார்.

2013 ஆண்டு வரை ஷீலா தீட்சித் தொடர்ந்து மூன்று முறை டெல்லி முதல்வராக இருந்திருக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close