[X] Close

ரூ.5000 கடனை திருப்பித் தராதவருக்கு கத்திக்குத்து: ஹைதரபாத்தில் அவலம்


hyderabad-person-stabbed-for-not-paying-debts

  • பாரதி ஆனந்த்
  • Posted: 10 Jan, 2019 13:03 pm
  • அ+ அ-

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் ரூ.5000 கடனை திருப்பித் தராதவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹைதராபாத் ஆசிப் நகர் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஃபரீது என்ற நபர் சதாம் என்பவரிடமிருந்து ஓராண்டுக்கு முன்னதாக ரூ.5000 கடன் வாங்கியிருக்கிறார்.

கொடுத்தகடனை சதாம் பல முறை திருப்பிக் கேட்டும் ஃபயீது திரும்பச் செலுத்தவில்லை. இதனால், ஆத்திரமடைந்து ஃபரீதை சதாம் சாலையில் வைத்து கத்தியால் குத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஆசிப் நகர் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ரவீந்தர், "சதாமும் அவரது நண்பர்களுக்கு நேற்று (ஜன.9) அன்று தப்பச்சபுத்ராவில் இருக்கும் அவரது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர் வழியில் ஒரு பழச்சாறு கடையில் அவர்கள் நின்று பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு ஃபரீது வந்திருக்கிறார். 

ஃபரீதிடம் வாங்கிய கடனைக் கேட்டிருக்கிறார் சதாம். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியிருக்கிறது. ஒருகட்டத்தில் சதாம் கத்தியால் ஃபரீதின் வயிற்றில் குத்தியிருக்கிறார். இதில் ஃபரீது படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் தேறி வருகிறார். சதாம் தப்பியோடிவிட்டார். அவரை தேடி வருகிறோம்" என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close