[X] Close

ராகுல் காந்திக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்


that-s-why-we-ve-sent-him-a-notice

  • பாரதி ஆனந்த்
  • Posted: 10 Jan, 2019 12:18 pm
  • அ+ அ-

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

முன்னதாக, ராகுல் காந்தி நேற்று, "56 இன்ச் மார்பளவு கொண்ட தேசத்தின் காவலாளி ஒரு பெண்ணிடம் தன்னை பாதுகாக்குமாறு கோரினார். அந்தப் பெண்ணிடம் நான் இரண்டரை மணி நேரம் கேள்வி எழுப்பியும் அவருக்கு பதில் சொல்லமுடியவில்லை. பிரதமர் மோடியை பாதுகாப்பதற்கு ஒரு பெண் (பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்) தேவைப்படுகிறார்" என்று பிரதமர் மோடியை விமர்சித்திருந்தார்.

இது குறித்து ட்வீட் செய்த தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா தனது ட்விட்டரில், "இதன் மூலம் ராகுல் என்ன சொல்ல முன்வருகிறார். பெண் என்பவள் வலிமையற்றவள் எனக் கூறுகிறாரா? மிகப்பெரிய ஜனநாயகத்தின் பாதுகாப்பு அமைச்சரை வலுவற்றவர் என்று அவர் கூறுவது முரணானது" எனப் பதிவிட்டிருந்தார்.

வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்வீட்டில், "இந்திய அரசியலில் இது ஒரு மிகவும் மோசமான முன்னுதாரணத்தை இந்த கருத்து ஏற்படுத்தியிருக்கிறது" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த ரேகா சர்மா, "நேற்று ராகுல் அவ்வாறு ஏன் ட்வீட் செய்தார் என்பது குறித்து ராகுல் காந்தியிடம் விளக்கம் கோரியுள்ளேன்.

அந்த அறிக்கை ஆணாதிக்கம் நிறைந்ததாக, பாலின பாகுபாட்டை தூண்டுவதாக ஆபாசமாக இருந்தது.

அதனாலேயே அவருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். பெண்களை அவ்வளவு தரம் தாழ்த்தி பேசியது குறித்து நிச்சயமாக ராகுல் விளக்கமளிக்க வேண்டும்" எனக் கூறினார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close