[X] Close

நடுங்காமல் ஆண்மகனைப்போல் பதில் சொல்லுங்கள் மோடி: ராகுல் தாக்கு


stop-shaking-be-a-man-and-answer-my-question

  • பாரதி ஆனந்த்
  • Posted: 10 Jan, 2019 11:23 am
  • அ+ அ-

'நடுங்குவதை நிறுத்தி விட்டு ஒரு ஆணாக இருந்து என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்' என்று மோடியை விமர்சித்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே கடும் வார்த்தைப்போர் நடந்து வருகிறது. 

ர்ஃபேல் விவகாரத்தில் பாஜக ஊழில் ஈடுபட்டதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில், ரஃபேல் பிரச்னை குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மட்டுமே நாடாளுமன்றத்தில் பதில் அளித்தி வருகிறார். அவ்வப்போது அருண்ஜேட்லி பதிலளிப்பார். ஆனால், பிரதமர் மோடி இதுவரை நேரடியாக பதிலளிக்கவில்லை.
இந்நிலையில், இதனை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "56 இன்ச் மார்பளவு கொண்ட தேசத்தின் காவலாளி ஒரு பெண்ணிடம் தன்னை பாதுகாக்குமாறு கோரினார். அந்தப் பெண்ணிடம் நான் இரண்டரை மணி நேரம் கேள்வி எழுப்பியும் அவருக்கு பதில் சொல்லமுடியவில்லை. பிரதமர் மோடியை பாதுகாப்பதற்கு ஒரு பெண் (பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்) தேவைப்படுகிறார்" என்று விமர்சித்திருந்தார்.

பெண்களை தரம் தாழ்த்துவதா?

இந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உத்தரப் பிரதேச பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டில் முதன்முறையாக பெண் ஒருவர் பாதுகாப்பு அமைச்சராக எனது அமைச்சரவையில் செயல்பட்டு வருகிறார். இது கவுரவம். எங்களது பாதுகாப்பு அமைச்சரின் பதிலுக்கு எதிர்க் கேள்வி எழுப்ப முடியாதவர்கள் அவரை விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர். அவர்கள் ஒரு பெண் அமைச்சரை மட்டும் விமர்சிக்கவில்லை. நாட்டின் ஒட்டுமொத்த பெண் இனத்தையும் தரம் தாழ்த்தி பேசி விட்டனர்'' என்று கூறினார்.

ராகுலின் கருத்துக்கு தேசிய மகளிர் ஆணையமும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அதன் தலைவர் ரேகா சர்மா தனது ட்விட்டரில், "இதன் மூலம் ராகுல் என்ன சொல்ல முன்வருகிறார். பெண் என்பவள் வலிமையற்றவள் எனக் கூறுகிறாரா? மிகப்பெரிய ஜனநாயகத்தின் பாதுகாப்பு அமைச்சரை வலுவற்றவர் என்று அவர் கூறுவது முரணானது" எனப் பதிவிட்டார்.
வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்வீட்டில், "இந்திய அரசியலில் இது ஒரு மிகவும் மோசமான முன்னுதாரணத்தை இந்த கருத்து ஏற்படுத்தியிருக்கிறது" என்றார்.

விடாத ராகுல்..

விமர்சனங்கள் குவிந்த நிலையிலும் ராகுல் காந்தி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் மீண்டும் ஒரு ட்வீட் செய்திருக்கிறார். அதில், "மரியாதைக்குரிய மோடி அவர்களே.. பெண்ணுக்கான மரியாதை என்பது நமது கலாச்சாரத்தில் வீட்டிலிருந்தே தொடங்குகிறது.
இப்போது, நடுங்குவதை நிறுத்தி விட்டு ஒரு ஆணாக இருந்து என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.

ரஃபேல் ஒப்பந்தத்தில் மாற்றத்தை நீங்கள் வலியுறுத்தியபோது விமானப்படையும் பாதுகாப்பு அமைச்சகமும் எதிர்ப்பு தெரிவித்ததா இல்லையா என்பதை மட்டும் கூறுங்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பெண் என்றால் அச்சம் கொண்டவளாக இருப்பார் என்ற தொணியில் அவரது ட்வீட் அமைந்திருப்பதற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close