[X] Close

அகமதாபாத்தில் 63 ஏக்கர் பரப்பளவில் ரூ.700 கோடியில் தயாராகும் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம்


ahamedabad-stadium

  • kamadenu
  • Posted: 10 Jan, 2019 09:58 am
  • அ+ அ-

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் 63 ஏக்கர் பரப்பில் ரூ.700 கோடியில் கட்டப்பட்டு வருகிறது.

அகமதாபாத் மொட்டேராவில் ஏற்கெனவே இருந்த சர்தார் பட்டேல்மைதானம் 1982-ம் கட்டப்பட்டு பழமையானதால், புதிய மைதானம்கட்ட குஜராத் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. அதன்படி 49,000ஆயிரம் பேர் அமரும் இருக்கைகள் கொண்ட பழைய மைதானம் முற்றிலும் இடிக்கப்பட்டு 2015-ல்கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. 63 ஏக்கர் பரப்பில் ரூ.700 கோடியில் புதிய மைதானம் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

அதே சர்தார் படேல் பெயரில் கட்டப்படும் புதிய மைதானம் 1.10லட்சம் பார்வையாளர்கள் அமரும்வசதி உடையதாக இருக்கும். தற்போது 90 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வசதி கொண்ட ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் மைதானம் தான் உலகிலேயே பெரிய கிரிக்கெட் மைதானம் ஆகும். இந்தியாவிலேயே பெரிய மைதானமாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் உள்ளது. இங்கு சுமார் 68,000 பார்வையாளர்கள் அமரும் வசதி உள்ளது.

அகமதாபாத்தில் புதிய மைதானம் கட்டும் பணி நிறைவடைந்தால் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற சிறப்பைப் பெறும். இந்த மைதானத்தில்4 உடைமாற்றும் அறை, பெரிய நீச்சல் குளம், கிளப் ஹவுஸ், உள்ளரங்க கிரிக்கெட் விளையாடும் வசதி என பல்வேறு சிறப்புகள் இடம் பெற உள்ளது.

இந்நிலையில் புதிய மைதானத்தின் கட்டுமான பணிகள் தொடர்பான படங்களை முதன்முறையாக ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் குஜராத் கிரிக்கெட் சங்க துணைத் தலைவரான பரிமால் நத்வானி. இதுதொடர்பாக அவர், தனது ட்விட்டர் பதிவில், “மொட்டேராவில் கட்டப்பட்டு வரும் கிரிக்கெட் மைதானம்மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தை விட பெரியதாக அமையும். குஜராத்கிரிக்கெட் சங்கத்தின் கனவு திட்டமான இது முடிந்தால் ஒட்டுமொத்த இந்தியாவின் பெருமையாக திகழும்” எனக் கூறியுள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close