[X] Close

ஏர் இந்தியா விற்பனை மூலம் ரூ 7 ஆயிரம் கோடி ஈட்ட திட்டம்


air-india

  • kamadenu
  • Posted: 10 Jan, 2019 09:58 am
  • அ+ அ-

பொதுத்துறை நிறுவனமான ஏர்இந்தியாவின் பகுதியளவு பங்கு விற்பனை மூலம் ரூ 7 ஆயிரம் கோடியைத் திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வரும் நிதி ஆண்டில் (2019-20) ஏர் இந்தியாவின் பகுதியளவு பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் இத்தொகையை திரட்ட முடியும் என்று மத்திய நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வரும் நிதி ஆண்டின் இரண்டாவது பாதியில் ஏர் இந்தியா பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்வகுத்து வருகிறது. ஏர் இந்தியாவின் துணை நிறுவனங்களின் சொத்துகளை விற்பனை செய்வதும் இதில் அடங்கும்.

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.55 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் இருந்தது. கடந்த ஆண்டுநவம்பரில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான அமைச்சரவை குழு இத்தொகையில் ரூ. 29 ஆயிரம் கோடியை சிறப்புஒதுக்கீடு திட்டம் (எஸ்பிவி) அடிப்படையில் ஏர் இந்தியா அசெட் ஹோல்டிங் நிறுவனத்துக்கு மாற்றியது. வரும் நிதி ஆண்டில் ஏர் இந்தியா பங்கு விற்பனை மூலம் ரூ. 7 ஆயிரம் கோடியைத் திரட்ட முடியும் என்று அரசு உறுதிபட நம்புகிறது.

கடந்த ஆண்டு மே மாதம் ஏர்இந்தியா பங்குகளை விற்பனைசெய்வதற்கு அரசு முயற்சி மேற்கொண்டது. ஆனால் நிறுவனத்தை வாங்க எவரும் முன்வராத நிலையில் இத்திட்டத்தை அரசு கைவிட்டது. அதேசமயம் துணை நிறுவனங்களின் சொத்துகளை விற்பனை செய்யும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டது.

ஏர் இந்தியா நிறுவனத்தில் 76 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பது என்றும் அதன் நிர்வாக செயல்பாடுகளை தனியார் வசமே விடுவதெனவும் அரசு முன்னர் முடிவு செய்தது. ஆனால் அதை வாங்கும் நிறுவனம் நிறுவனத்துக்கு உள்ள ரூ. 24 ஆயிரம் கோடிகடனுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ரூ.8 ஆயிரம்கோடிக்கான கடன் பொறுப்புகளுக்கும் பொறுப்பேற்கவேண்டும் என்ற விதிமுறை காரணமாக ஆரம்பத்தில் ஆர்வம் காட்டிய நிறுவனங்களும் பிறகு ஏலத்தில் பங்கேற்கவில்லை.

இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம். மத்திய அரசு இந்நிறுவனத்தில் ரூ. 980 கோடி முதலீடு செய்தது. இது தவிர இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்நிறுவனத்தில் ரூ. 2,345 கோடியை முதலீடு செய்ய நாடாளுமன்ற குழு ஒப்புதல் அளித்தது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் கிரவுண்ட் ஹேண்ட்லிங் துணை நிறுவனங்களான ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் நிறுவனத்தையும், ஏர் இந்தியா இன்ஜினீயரிங் சர்வீசஸ் நிறுவனத்தையும் விற்பதென முடிவு செய்தது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமாக நாட்டின் பல பகுதிகளில் உள்ள நிலங்களை விற்பது தொடர்பாக டெண்டர் கோரப்பட்டது. ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமாக மும்பையில் 28 அடுக்கு மாடி குடியிருப்புகளும், அகமதாபாத்தில் 28 குடியிருப்புகளும், புணேயில் ஒரு அலுவலகமும், இது தவிர நாட்டின் பல பகுதிகளில் காலி இடமும் உள்ளன.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close