[X] Close

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் எல்லா மாநிலத்திலும் விவசாயக் கடன் ரத்து: ராஜஸ்தானில் விவசாயிகள் மத்தியில் ராகுல் காந்தி உறுதி


rahul-gandhi-speech

  • kamadenu
  • Posted: 10 Jan, 2019 09:50 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் எல்லா மாநிலங்களிலும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று விவசாயிகள் பங்கேற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:விவசாயிகளின் துன்பத்தை போக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தங்கள் பலம் என்ன என்பதை ராஜஸ்தான் உட்பட சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் காட்டிவிட்டனர். பாஜகவை தோற்கடித்தனர். காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் விவசாயக் கடன்களை ரத்து செய்துள்ளன. வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் எல்லா மாநிலங்களிலும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். விவசாயக் கடன் தள்ளுபடி என்பது சிறிய நடவடிக்கைதான். விவசாயிகளின் பிரச்சினை தீர ஒரு புதிய பசுமைப் புரட்சி தேவைப்படுகிறது.

ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது பிரதமர் மோடி ஒரு நிமிடம் கூட கலந்து கொள்ளவில்லை. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close